சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் ரசிகர்களுக்கு பிரபலமானவர் நடிகர் சஞ்சீவ். சின்னத்திரையில் இவர் நடிப்பில் வெளியான ‘திருமதி செல்வம்’ தொடர் ரசிகர்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்துள்ளது.

நடிகர் சஞ்சீவ் தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் தெரிந்த ஒன்றே. இவர் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 5இல் வைல்டு கார்டு என்ட்ரியில் நுழைந்து சில வாரங்கள் பிக் பாஸ் போட்டியாளராக இருந்தார். கடந்த வாரம் தான் சஞ்சீவ் பிக் பாஸில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி செல்வதற்காக சஞ்சீவ் பிரபல மெகா தொடரில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ள தகவல் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் வானத்தைப்போல தொடரில் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வந்த தமன் குமார் அதிலிருந்து திடீரென விலகினார். இதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சீவ்க்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் பிக் பாஸ் செல்ல இருந்தால் அந்த வாய்ப்பை நிராகரித்தார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீகுமார் என்னும் பிரபல நடிகர் நடித்து வருகிறார்.