Homeபொழுதுபோக்குவேற வழியில்லாமல் நாகசைதன்யா சம்மதித்திருக்கலாம்.. நாகர்ஜூனா பரபரப்பு பேச்சு

வேற வழியில்லாமல் நாகசைதன்யா சம்மதித்திருக்கலாம்.. நாகர்ஜூனா பரபரப்பு பேச்சு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சம்ந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் இருவரும் இணைந்து சினிமாவில் நடித்து வந்தனர்.

Samantha wedding

இந்நிலையில், கடந்தாண்டு சமந்தா தனது சமூகவலைதளப்பக்கத்தில் நாகசைத்தன்யாவை விட்டு பிரிவதாக அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு சமூகவலைதளங்களை மட்டும்மல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா துறையிலும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனிடையே நாகசைதன்யா கூறும்போது பிரிவு என்பது பரவாயில்லை. ஏற்றுக் கொள்ளக்கூடியது தான். அவரவர்களின் சொந்த நலனுக்காக எடுக்கப்பட்ட பரஸ்பர முடிவு. சமந்தாவுக்கு மகிழ்ச்சி என்றால், எனக்கும் மகிழ்ச்சியே. அத்தகைய சூழ்நிலையில் விவாகரத்து என்பது சிறந்த முடிவாக இருக்கும் என்று கூறினார்.

sam

இதைத்தொடர்ந்து சமந்தாவும் நாகசைத்தன்யாவும் அவரவர் பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர். ‘புஷ்பா’ படத்தில் சமந்தா ஆடிய பாடல் சமூகவலைதளத்தில் பெரும் வைரலானது. இதற்காக அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெலுங்கில் ‘பங்கர் ராஜு’ என்ற திரைப்படம் நாக சைத்தன்யா மற்றும் நாகர்ஜுனா இருவரும் சேர்ந்து நடித்துள்ளார்கள். படமும் ரிலீஸ் ஆகி வசூலை வாரிகுவித்து வருகிறது.

samantha

பங்கர் ராஜூ படம் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நாகர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ” இந்த விவாகரத்து விஷயத்தை நாக சைதன்யா மிகவும் அமைதியாக கையாண்டார்.

Sam

எல்லா அப்பாவையும் போலவே நானும் அவரை நினைத்து மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் அவர் எங்களை பற்றி அதிகம் கவலைப் பட்டார். இந்த சமயத்தில் நானும் என் குடும்பமும் அவருக்கு ஆதரவாக இருந்தோம். இந்த விவாகரத்து முழுக்க முழுக்க சமந்தாவின் முடிவு மட்டுமே. அவர்தான் விவாகரத்துக்கு மிகவும் ஆசைப்பட்டார்” என்றார்.

sam

நாகார்ஜுனாவின் இந்த பேட்டியை வைத்துப் பார்க்கும்போது விவாகரத்து முடிவு சமந்தாவால் மட்டுமே எடுக்கப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் வேறு வழியில்லாமல் நாக சைதன்யாவும் அதற்கு சம்மதித்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

Sam

சமீபத்தில் நாகசைதன்யா அளித்த பேட்டியில், திரைப்படங்களில் தனக்கு ஏற்ற ஜோடி சமந்தாதான் என்றும் சமந்தாவின் மகிழ்ச்சி எனக்கு ரொம்ப முக்கியம் என்றும் கூறியிருந்தார்.

சற்று முன்