‘ஜோக்கர்’ என்னும் மாறுப்பட்ட திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் குரு சோமசுந்தரம். இவர் அதிகப்படங்களில் நடிக்கவில்லையென்றாலும் கூட இவர் நடிக்கும் படங்களில் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் நின்றுவிடும். சித்தார்த் நடிப்பில் வெளியான ‘ஜிகிர்தண்டா’ படத்திலும் குரு சோமசுந்தரம் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.

இதுநாள் வரை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வந்த குரு சோமசுந்தரத்தை இப்போது மலையாள ரசிகர்களும் கொண்டாட ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியானப் படம் ‘மின்னல் முரளி’. சூப்பர் ஹீரோவான இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்படம் தமிழ், மலையாளம் உள்ளி்ட்ட மொழிகளில் வெளியானது.
‘மின்னல் முரளி’ படத்தில் டொவினோவுக்கு இணையாக குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். இவரது நடிப்பை பார்த்து ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலர் வெகுவாக பாராட்டினர். இந்நிலையில், மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், குரு சோமசுந்தரத்தை அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது மோகன்லால் இயக்கி நடிக்கவுள்ள ‘பாரோஸ்’ படத்தில் முக்கியகதாபாத்திரத்தில் நடிக்க குரு சோமசுந்தரத்திற்கு வாய்ப்பு அளித்துள்ளார்.

குரு சோமசுந்தரம் இதுவரை தான் நடிக்கும் படங்கள் ஒரே மாதிரியான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கமாட்டார். படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், ‘வஞ்சகர் உலகம்’ என்னும் படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அப்படத்தில் தான் நடிக்கும் காட்சிக்காக இரண்டு வெளிநாட்டு ஒளிப்பதிவாளர்கள் வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு படக்குழுவினரும் சம்மதம் தெரிவித்தனர். இத்தனைக்கும் அந்த காட்சி ஒரு நிமிட காட்சியாம். அதை குரு சோமசுந்தரம் ஆறு நிமிடத்தில் கொடுத்துள்ளாராம். இதை அவரது நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாகவே குரு சோமசுந்தரம் பார்த்து வருகிறார்.