Homeபொழுதுபோக்குசாமியாரின் பேச்சைக் கேட்டு நஷ்டம் அடைந்த தொழிலதிபரை மணமுடித்த நடிகை மாதவி. இவர்தான் அந்த கனவாரா...

சாமியாரின் பேச்சைக் கேட்டு நஷ்டம் அடைந்த தொழிலதிபரை மணமுடித்த நடிகை மாதவி. இவர்தான் அந்த கனவாரா என்று புகைப்படத்தை பார்த்து உறைந்துபோன ரசிகர்கள்

80 களில் ஹீரோயின்களில் ஒருவராக இருந்த நடிகை மாதவி 14 செப்டம்பர் 1962 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தவர். இவரின் நிஜப் பெயர் அல்லதுர்க்கம் விஜயலட்சுமி. இவர் தனது குடும்பத்தை மிகவும் நேசிப்பவர். சிறுவயதிலேயே பரத நாட்டியக் கலையில் சிறந்து விளங்கிய மாதவி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் நடனமாடி இருக்கிறார். இவர் தனது 17 ஆவது வயதில் திரை உலகிற்கு அடி எடுத்து வைத்தார். இவர் தனது நடிப்பாலும் அழகாலும் ரசிகர்கள் அனைவரையும் தன்பக்கம் வைத்திருந்தார்.

madhavi
madhavi

மாதவி நடித்திருந்தார் முதல் படத்திலேயே இவரது துறுதுறுப்பான நடிப்பும் பேச்சும் அனைவர் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டது. எனவே இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டது. அன்றைய படங்களிலேயே மிகவும் மாடனாகவும், கவர்ச்சியாகவும் நடித்து இளைஞர்கள் அனைவரையும் தன் வசம் வைத்திருந்தார். புடவை, நாகரீக உடை இவற்றில் எதுவாக இருந்தாலும் மாதவி அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு அவரின் உடல் கட்டமைப்போடு அழகாக இருந்தது.

இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இவர் இணைந்து நடிக்காத முன்னணி கதாநாயகர்கள் ஒருவரும் இல்லை என்றும் கூறலாம். அந்த அளவிற்கு 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அந்தக் காலத்திலேயே பிகினி பட காட்சிகளில் நடித்த பெருமையும் நடிகை மாதவியையே சேரும்.

madhavi
madhavi

இவ்வாறு வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கொடுத்து வந்திருந்த மாதவிக்கு படவாய்ப்புகள் குறைந்து அவர்மன உளைச்சலில் இருந்த நேரத்தில், தனது நெருங்கிய நண்பரான ஒரு நடிகரிடம் ஆலோசனை கேட்க சென்றிருக்கிறார். இதற்காக அந்த நடிகர் அவரை இமயமலையில் இருக்கும் தனது மானசீகக் குருவை சந்திக்குமாறு அறிவுரை கூறியுள்ளார்.

அதன்படி மாதவி சாமியாரை பார்க்க சென்றிருக்கிறார். சாமியாரோ மாதவியை திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் அங்கு வந்திருந்த வெளிநாட்டு பக்தர் ஒருவரையே திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார். அதன்படி அமெரிக்காவில் தொழிலில் நஷ்டம் அடைந்திருந்த அந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் மாதவி.

madhavi

மேலும் இந்த திருமணத்திற்கு பிறகு 30 ஆண்டுகள் இந்தியாவிற்கு வர முடியாது எனவும் கூறியுள்ளார்கள். இந்நிலையில் சாமியார் சொன்னதுபோலவே இவர்களின் திருமணத்திற்கு பிறகு கணவர் ராகுல் அவர்களின் தொழில் மிகவும் சிறப்புடன் சென்றுள்ளது. மேலும் தற்போது இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். மிகவும் மகிழ்ச்சியாக தனது குடும்ப வாழ்க்கையை இவர் வாழ்ந்து வருகிறார். சாமியார் சொன்னதுபோலவே திருமணத்திற்கு பிறகு இந்தியா வராமல் தனது குடும்பத்தையும், கணவரின் தொழிலையும் சிறப்புடன் கவனித்து வருகிறாராம் நடிகை மாதவி.

சற்று முன்