தமிழ் திரைப்பட உலகில் சிலம்பரசனுடன் இணைந்து போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானவர் தான் வரலட்சுமி. நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் அவரின் மூத்த மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் தான் வரலட்சுமி சரத்குமார்.

தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் முதல் பக்கத்தில் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துவருகிறார். இவர் புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கும் இந்த படத்திற்கான ஷூட்டிங்கில் பங்கேற்பதர்காக தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராதியாவுடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் புதுச்சேரிக்கு சென்ற நடிகை வரலட்சுமி ஐஸ்வர்யாராயை நேரில் சந்தித்து அவர் குடும்பத்துடன் போட்டோவும் எடுத்துக் கொண்டுள்ளார். இந்த போட்டோக்களை கடந்தவாரம் வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதில் தனக்கே உரிய எளிமையான கருப்பு நிற உடையில் இருந்தார் நடிகை ஐஸ்வர்யாராய்.

இந்த போட்டோக்களை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பலர் ஐஸ்வர்யாராய் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார், அதனால்தான் சூட்டிங்கிற்கு போன இடத்தில் கணவர் மற்றும் மகளுடன் சென்றுள்ளார் என கொளுத்தி போட்டுள்ளனர். இந்த தகவல் காட்டுத்தீ போல பரவ ஆரம்பித்துள்ளது.

உடனே சிலர் ஆமாம் அதனால் தான் ஐஸ்வர்யா ராய் வரலட்சுமியுடன் இருக்கும் போட்டோக்களில் வயிற்றில் கையை வைத்து மறைத்துக் கொண்டும், மற்றவர்களுக்கு பின்னால் மறைந்து கொண்டும் இருக்கிறார் என்றும் செய்திகளை கிளப்பி வருகின்றனர். ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்று பாலிவுட் வட்டாரத்தில் இத்தகவல் படுவேகமாக பரவி வருகிறது.
பொதுவாக பிரபலங்கள் எது செய்தாலும் அது உடனடியாக வைரலாக பரவி விடும். அந்த வகையில் ஐஸ்வர்யாராய் அவருடைய கணவருடன் பீச் பகுதியில் நடந்து செல்லும் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படம் தான் தற்போது வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.

இந்தப் புகைப்படத்தில் அபிஷேக்பச்சன் வெள்ளை நிற டீசர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து உள்ளார். ஐஸ்வர்யா ராய் மிகவும் சிம்பிளாக கவுன் போட்டுக் கொண்டு கூலிங் கிளாஸ் அணிந்து உள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் இவரின் வயிறு சற்று பெரிதாக காணப்படுவதால் ரசிகர்கள் பலர் ஐஸ்வர்யா ராயிடம் இரண்டாவது முறையாக நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்ற கேள்வியை முன்வைத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது வரை இதற்கு அவரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை. மேலும் சில ரசிகர்கள் ஐஸ்வர்யாராயின் இரண்டாவது குழந்தைக்காக மிகவும் ஆவலாக காத்திருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் தான் ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு தற்போது ஆராதியா என்ற பெண் குழந்தை உள்ளது. இரண்டாவது முறையாக ஐஸ்வர்யாராய் கர்ப்பமாக இருப்பதாக சொல்லப்படும் தகவலை தொடர்ந்து ஐஸ்வர்யாவிற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த செய்தியை எப்பொழுது ஐஸ்வர்யா ராய் உறுதிப் படுத்துவார்கள் எனவும் ரசிகர்கள் வெகு ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.