நடிகர் விஷால் அவர்கள் 1967 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவரின் உண்மையான பெயர் விஷால் கிருஷ்ணா அப்பா ஜிகே ரெட்டி அம்மா ஜானகிதேவி அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் எனவும் பிரபல தொழிலதிபர் எனவும் தெரியவருகிறது. இவர்கள் ஆந்திராவில் பிறந்து சென்னையில் செட்டில் ஆனவர்கள் விஷால் சென்னையில் பிறந்து சென்னையில் தனது பள்ளி கல்லூரிப் படிப்பை முடித்தார்.நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இவரின் முதல் திரைப்படம் 2004 இல் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான செல்லமே திரைப்படம் என்று சிலருக்கு தெரிந்த ஒன்று ஆனால் 1989 களிலே ஜாடிக்கேத்த மூடி என்ற திரைப்படத்தில் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்து விட்டார்.
பிறகு 2004ல் வெளியான செல்லமே திரைப்படத்தில் தான் ஹீரோவாக அறிமுகப்படுத்திக் கொண்டார் அந்தப் படமும் வெற்றி பெறாமல் தோல்வியைத் தழுவி பின்னடைவை சந்தித்ததால் விஷால் சில சலசலப்புக்கு ஆளாக்கப்பட்டார். அதன்பிறகு தன் தந்தை ஜிகே ரெட்டி அவர்களின் தயாரிப்பில் வெளியான சண்டக்கோழி படத்தில் நடிக்கத் துவங்கி தன்னை சூப்பர்ஹிட் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்திக் கொண்டார். படமும் மிகப்பெரிய வெற்றியை தட்டியது. அதனைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் வெளியான தாமிரபரணி படத்திலும் ஹீரோவாக நடித்தார் அந்தப் படமும் வெற்றியைத் தட்டியது. தொடர்ந்து இரண்டு படங்களை கொடுத்த விஷால் தமிழ் மக்களுக்கு வெளியில் தெரிய ஆரம்பித்தார்.
பிறகு அவர் எடுத்த சத்தியம், தோரணை, திமிரு போன்ற படங்கள் தொடர் தோல்வியை தழுவியது எதற்கும் மனம் தளராமல் விஷால் நடிக்கும் பாண்டியநாடு படத்திலேயே தன்னை தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து இயக்குனர்களுடன் சேர்ந்து துணை இயக்குனராகவும் உருவானார். இதனைத் தொடர்ந்தே சினிமாக்களை கற்றுவந்த விஷால் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று பொருளாளர் அதனை தொடர்ந்தே துப்பறிவாளன் போன்ற படங்களில் நடித்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
தற்போது வீரமே வாகை சூடும் என்ற படத்தில் நடித்து முடித்து டீசர் வெளியான நிலையில் மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்கு தன்னை புக் செய்து கொண்டார். படத்தின் பட்ஜெட் குறைவாக உள்ள நிலையில் கார்த்திக் சுப்புராஜ் விஷாலிடம் படத்தின் நிலைமையை கூற விஷால் சன் சம்பளத்திலிருந்து ஒரு கோடியை குறைத்துள்ளார். இது மற்ற நடிகர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சமயத்தில் கார்த்திக் சுப்புராஜ மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் காட்சிப்பிழை என்ற குறும்படத்தின் மூலம் துவங்கி 2012ஆம் ஆண்டு வெளியான பீட்சா படத்தின் மூலம் தன்னை இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்திக் கொண்டார்.
இந்தப்படம் விஜய்சேதுபதியை வைத்து எடுத்து மிகப்பெரும் வெற்றியை தட்டியது ஜிகர்தண்டா, பெண்ஸ்டாக்கிஸ், இறைவி, மெர்குரி, பேட்டை, ஜகமே தந்திரம், போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறார், தற்போது விஷாலும் கார்த்திக் சுப்புராஜும் இனைந்தாள் தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல திரைப்படத்தை கொடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,சம்பள குறைவை பற்றி விஷாலிடம் கேட்டபோது கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் நடிப்பதற்காக நான்மிகவும் ஆர்வமா உள்ளேன். எனவும் கூறியிருக்கிறார்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…