தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு இயக்குனராக இருக்கிறார் வெற்றிமாறன். அவருக்கு இன்று பிறந்த நாள் என்பதால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதே போல தளபதி விஜய்யை வைத்து அவர் ஒரு படத்தை இயக்க போகிறார் என்று தகவலும் வெளி வந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் தன் வசம் ஈர்த்தவர் வெற்றிமாறன். கடந்த 2007 ஆம் ஆண்டு அந்த படம் வெளியாகி இருந்தாலும் இன்று வரை அது பேசப்பட்டு வருகிறது. பொல்லாதவன் மட்டும் அல்ல, அவர் இயக்கிய அனைத்து படங்களும் வேற ரகத்தில் இருந்துள்ளன.
தற்போது விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்னும் படத்தை அவர் இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து சூர்யாவை வைத்து வாடிவாசல் என்னும் படத்தை இயக்க உள்ளார். அதோடு வட சென்னை படத்தின் ராஜன் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு ராஜன் வகையறா என்று வெப் சீரிஸ் பணிகளும் நடந்துகொண்டு இருக்கிறது.

இப்படி இந்த பணிகள் எல்லாம் முடிந்த பிறகு தளபதி விஜயோடு அவர் கை கோர்க்க உள்ளார். இந்த படத்தின் கதையானது விவசாயத்தை அடிப்படையாக கொண்டது என்று ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. ஏற்கனவே இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படத்தில் தளபதி விஜய் விவசாயத்தை பற்றி பேசி இருப்பார்.

இப்போது வெற்றி மாறன் படத்திலும் மிக முக்கியமான விவசாயம் மற்றும் அதை சுற்றி நடக்கும் மிகப்பெரிய அரசியல் குறித்த பிரச்சனை பற்றி பேச போகிறார் என்றால் நிச்சயம் அது இந்திய அளவில் மிக பெரிய ஒரு ஈர்ப்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல தளபதி விஜய் நடிக்க வேண்டிய சில முக்கியமான படங்கள் வேறு சில நடிகர்களுக்கு கை மாறியது போல இந்த படம் ஆகிவிட கூடாது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

எது எப்படியோ, இந்த படம் மட்டும் சரியாக வெளியானால் அது மெகா ஹிட் படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால் விஜய் படங்களின் ரிலீஸின் போது எப்போதும் வரும் பிரச்சனைகள் இந்த படத்திற்கு வராமல் இருந்தால் சரி தான்.