மக்கள் செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் சேதுபதி தற்போது ஒரு மிக சிறந்த நடிகராக வளம் வருகிறார். தற்போது எங்கு திரும்பினாலும் விஜய் சேதுபதி மயம் என்று சொல்லும் அளவிற்கு அவருடைய ஏராளமான படங்களும், டிவி ஷோக்களும் உள்ளன. ஒரு பக்கம் லாபம் படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொருபக்கம் துக்ளக் தர்பார் படம் நேரடியாக சன் டிவியில் வெளியாகியது. அதே சமயம் ஒரு சமையல் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறார்.
இப்படி தற்போது படு பிஸியாக இருக்கும் அவர், ஆரம்பகாலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் சினிமாவிற்குள் வந்தார் என்பது நாம் அறிந்ததே. சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் சேதுபதி கூறுகையில், நான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்து இருந்தேன். பாக்ஸிங் காட்சிகள் சிலவற்றில் ஓரமாக நின்றுகொண்டிருந்தேன். ஆனால் அந்த படத்தின் மூலம் என்னை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறி இருந்தார்.
ஜெயம் ரவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது இந்த படம் ஒரு சூப்பர் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல கடந்த 2006 ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளிவதன் புதுப்பேட்டை படத்தில் கூட விஜய் சேதுபதி நடித்திருப்பார்.
இப்படி ஆரம்பகாலத்தில் எத்தனையோ சிறு வேடங்களில் நடித்தவர் தான் இன்று ஜாம்பவானாக வளம் வருகிறார். அடுத்ததாக செப் 17 ஆம் தேதி, அவர் நடிப்பில் அனபெல் சேதுபதி என்னும் படம் வெளியாக உள்ளது. தீபக் சுந்தர்ராஜன் இயக்கி உள்ள இந்த படத்தில், யோகிபாபு, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…