Homeபொழுதுபோக்குதளபதி விஜய் மற்றும் சங்கீதாவின் முதல் சந்திப்பு எப்படி நடந்தது? திருமணத்திற்கு விஜய் எப்படி ஒப்புக்கொண்டார்...

தளபதி விஜய் மற்றும் சங்கீதாவின் முதல் சந்திப்பு எப்படி நடந்தது? திருமணத்திற்கு விஜய் எப்படி ஒப்புக்கொண்டார் தெரியுமா?

இன்று தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவரின் தேதிக்காக பல இயக்குனர்கள் இன்று வரிசையில் நிற்கிறார்கள். வசூல் ரீதியாக திரையரங்க உரிமையாளர்களின் முதல் தேர்வாக இருப்பது தளபதி விஜய் படங்கள் தான். இப்படி இன்று திரையுலக ஜாபவானாக இருக்கும் விஜய் தனது மனைவி சங்கீதாவை எப்போது சந்தித்தார், அவ்ரகளுடைய திருமணம் எப்படி நிச்சயிக்கப்பட்டது என்று பார்ப்போம்.

Actor vijay sangeeta
Actor vijay sangeeta

சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் விஜய் தன் திருமணம் குறித்த முழு விவரங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, பொதுவாக நான் வெளிநாடுகளில் இருந்து என்னை சந்திக்க வரும் ரசிகர்களுக்காக கொஞ்சம் அதிக நேரம் செலவிடுவேன். காரணம் அவர்கள் தொலை தூரத்தில் இருந்து எப்போதோ ஒருமுறை வருபவர்கள்.

அப்படி ஒருநாள், லவ் டுடே படத்தின் ஷூட்டிங் சமயத்தில் என்னை பார்க்க லண்டனில் இருந்து சங்கீத ஒரு ரசிகையாக வந்திருந்தார். அவரோடு இங்கு வசிக்கும் அவருடைய சொந்தக்காரர்களும் வந்திருந்தார்கள். என்னிடம் ஆட்டோகிராப் கேட்டார்கள், போட்டோ எடுத்துக்கொண்டார்கள். அதன் பிறகு உங்கள் தாய் தந்தையரிடம் பேசலாமா என்று அவர்கள் கேட்டார்கள்.

தாராளமாக பேசலாம். நான் தான் சற்று அமைதியானவன், அவர்கள் நன்றாக பேசுவார்கள். நீங்கள் வீட்டிற்கு வாருங்கள் என்றேன். இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வீட்டிற்கு வந்தார்கள். அனைவரோடும் பேசிவிட்டு அவர்கள் சென்றுவிட்டார்கள். இது நடந்து சில நாட்கள் கழித்து என் அப்பா என்னிடம் வந்து, விஜய் உன்னிடம் நான் தனியாக பேசவேண்டும் என்றார்.

Actor vijay sangeeta
Actor vijay sangeeta

பொதுவாக என் அப்பா என்னிடம் தனியாக பேசவேண்டும் என்றால் எனக்கு சற்று படபடப்பாக இருக்கும். காரணம் அவர் மிக முக்கியமான விடயங்களை பேசுவதற்காக தான் இப்படி கூறுவார். என் அப்பாவிடம் சரி என்று கூறி அவரிடம் நான் பேச துவங்கினேன். அப்போது அவர், சங்கீதா மற்றும் அவர்கள் குடும்பத்தை பற்றி என்ன நெனைக்கற? என்று கேட்டார்.

நல்ல பெண், நல்ல குடும்பம் என்று நான் கூறினேன். உடனே அவர், சங்கீதாவையும் அவர்கள் குடும்பத்தையும் எனக்கும் உன் அம்மாவிற்கும் பிடித்துள்ளது. உனக்கு சங்கீதாவை திருமணம் செய்ய விருப்பம் உள்ளதா என்று கேட்டார். நான் யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டேன். பிறகு ஒரு வாரம் கழித்து மீண்டும் என் அப்பா என்னிடம் பேசினார். அப்போது நான் உங்கள் விருப்பம் என்று கூறினேன். அதன் பிறகு திருமண ஏற்பாடுங்கள் எல்லாம் தொடங்கின என்று கூறியுள்ளார் தளபதி விஜய்.

சற்று முன்