தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக தற்போது இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவரும் அணைத்து படங்களும் சூப்பர் ஹிட் தான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து இவர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதாவை மணந்தார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே விஜய் படத்தில் நடித்துள்ளனர். சஞ்சய், வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலில் இடம்பெற்றிருப்பார். அதே போல மகள் திவ்யா மெர்சல் திரைப்படத்தில் ஒரு சிறிய காட்சியில் நடித்திருப்பார்.
சஞ்சய் குறித்து சில தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவராது உண்டு. ஆனால் திவ்யா குறித்து பெரிதாக எந்த தகவலும் வெளிவருவது கிடையாது. கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் பயின்று வரும் AISC பள்ளி தங்களது பேட்மிட்டன் அணி குறித்த ஒரு புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்திருந்தது. அதில் திவ்யா சாஷா இடம்பெற்றிருந்தனர்.

இதன் மூலம் அவர் ஒரு சிறந்த பேட்மிட்டன் பிளேயர் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து தற்போது அவரது புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெறுகிறது. இதில் அவர் சற்று வளந்துள்ளார்.

சஞ்சய் மற்றும் திவ்யா என இருவருக்கு சமுக வலைத்தளங்களில் எந்த ஒரு கணக்கும் இல்லை. ஆனாலும் இவர்கள் பெயரில் சில பேக் ஐடி இருப்பதும் அதில் சில புகைப்படங்கள் வெளிவருவதும் குறிப்பிட தக்கது. அதிலும் குறிப்பாக சில நாட்களுக்கு முன்பு திவ்யாவின் பேக் ட்விட்டர் கணக்கில் இருந்து சாந்தனுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதும் அதற்க்கு சாந்தனு பதில் அளித்ததும் ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது.