test header
- Advertisement -

பீஸ்ட் படம் குறித்த அசத்தலான அப்டேட். இந்த ஸ்பீட்ல போனா படம் சீக்கிரம் ரிலீஸ் ஆகிடும் போலயே.

தளபதி விஜயின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் விஜயை வைத்து இயக்கம் முதல் படம் இது. இந்த படம் குறித்த பல்வேறு தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிக்கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது சூப்பரான அப்டேட் கிடைத்துள்ளது.

beast movie still

-advertisement-

கோலமாவு கோகிலா மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார், அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். அந்த படம் முடிந்தவடைந்த நிலையில், எப்போது வெளியாகும் என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

டாக்டர் படத்தை தொடர்ந்து அவர் இயக்கும் படம் பீஸ்ட். தளபதி விஜய்யின் 65வது படமான பீஸ்ட்டில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இந்த படக்குழு டெல்லி செல்ல போவதாகவும் அங்கு நான்கு நாட்கள் செட்டியுல் இருக்கும் என்றும், அதனை தொடர்ந்து பீஸ்ட் படக்குழு வெளிநாடு சென்று சில முக்கிய காட்சிகளை படமாக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

-advertisement-

beast movie still

படப்பிடிப்பு பணி கிட்டத்தட்ட 65% முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் மற்ற பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கொரோனா காலக்கட்டத்தில் படங்கள் சொன்ன தேதிக்கு வெளிவராத நிலையில், பீஸ்ட் படம் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது போலவே 2022 பொங்கல் பண்டிகைக்கு நிச்சயம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேகத்தில் படம் தொடர்ச்சியாக சென்றால் ரசிகர்களின் ஆசை நிச்சயம் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. எனினும் படக்குழு ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வரை நாம் காத்துகொண்டு தான் இருக்க வேண்டும்.

-advertisement-

Leave a Comment