Homeடிவிபிரபல சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் வெங்கட். இது என்னடா இந்த சீரியலுக்கு வந்த சோதனை...

பிரபல சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர் வெங்கட். இது என்னடா இந்த சீரியலுக்கு வந்த சோதனை என புலம்பிய ரசிகர்கள்.

இந்த காலகட்டத்தில் குடும்ப பெண்கள் பெரும்பாலானோரின் ஒரு முக்கிய பொழுது போக்காக இருப்பது டீவி சீரியல் தான். அவர்கள் தன் வேலையை செய்துகொண்டிருக்கும்போது கூட டீவியின் வால்யுமை அதிகமாக வைத்து சீரியல் கேட்ப்பதுண்டு. அந்த அளவிற்கு இங்கு சீரியர்கள் பிரபலம் என்றே கூறலாம். இந்த சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள் சிலர் ஒரு சீரியல்களில் மட்டுமே நடிப்பது கிடையாது.

serial

உதாரணமாக எடுத்துக்கொண்டால், விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பாக்கிய லட்சுமி சீரியலில் தாத்தா கதாபாத்திரத்தில் நடிப்பவர், பாண்டியன் ஸ்ட்ரோஸ் சீரியலில் மாமா(முல்லைக்கு அப்பா) கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதே போல பாக்கிய லட்சுமி சீரியலில் செல்வி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர், பாண்டியன் ஸ்ட்ரோஸ் சீரியலில் ஐஸ்வர்யாவின் சித்தியாக நடித்திருப்பார்.

இப்படி கதைக்கு ஏற்ப நடிகர்கள் வெவ்வேறு சீரியல்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதுண்டு. அதே போல சில நடிகர்கள் வெவ்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் கூட நடிப்பதுண்டு. அப்படி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா என்கிற சீரியலில் அஸ்வின் என்ற கதாபாத்திரத்திலும், பாண்டியன் ஸ்ட்ரோஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் நடிகர் வெங்கட்.

தற்போது இவர் சன் தொலைக்காட்சி சீரியலான ரோஜாவில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரோஜா சீரியல் இதுவரை பல நூறு எபிசோட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் சீரியல். அதில் இருந்து வெங்கட் வெளியேறிய காரணம் தெரியவில்லை. அது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது.

venkat

என்னுடைய ரசிக குடும்பங்களே நான் உங்களுக்கு ஒரு செய்தி கொண்டுவந்துள்ளேன். அது சிலருக்கு சந்தோசமாக இருக்கலாம், சிலருக்கு வருத்தமாகவும் இருக்கலாம். உங்கள் அஷ்வின் ரோஜா சீரியலில் இருந்து வெளியேறுகிறேன். உங்களுக்கு ஏமாற்றம் அளித்ததர்காக மன்னியுங்கள். ஆனால் நீங்கள் என்னை தொடர்ந்து ஜீவாவாக பார்க்கலாம். நீங்கள் இதுவரை அஷ்வின் கதாபாத்திரத்திற்கு கொடுத்த பேராதரவிற்கு நன்றி. இனியும் உங்கள் ஆதரவு எனக்கு இருக்கும் என நம்புகிறேன். இப்படிக்கு உங்கள் நண்பன் வெங்கட். இப்டியாக அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

சற்று முன்