மக்கள் எந்த சேனலில் ஒலிபராகவும் நிகழ்ச்சியை அதிகமாக பார்க்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள உதவுகிறது TRP(டெலிவிசன் ரேட்டிங் பாய்ண்ட்) வாராவாரம் எந்த சீரியல் அதிக பார்வையாளர்களை பெற்றுள்ளது என்ற போட்டி வருவதுண்டு. இந்த போட்டியானது குறிப்பாக சன், விஜய், ஜீ தமிழ் ஆகிய சேனல்களுக்கு இடையே தான் பெரும்பாலும் நடக்கும்.

கடந்த சில மாதங்களாக பாரதி கண்ணம்மா சீரியல் தான் TRPயில் முதல் இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியல் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்க்கு முக்கிய காரணமாக இருப்பது, பல வருடங்களுக்கு பிறகு ரோஜாவின் தாயார் கடந்த வாரம் வீட்டிற்கு வந்ததன் காட்சி ஒளிபரப்பானதால் சீரியல் சூடுபிடிக்க துவங்கியுள்ளது என்று கூறப்படுகிறது.
அதே சமயம் TRPயில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். லட்சுமி அம்மாள் இறப்பு குறித்த காட்சியும், கண்ணன் கடைசியாக தன் தாயின் முகத்தை பார்க்க வருவானா மாட்டானா போன்ற எதிர்பார்ப்புகளும் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை TRPயில் இரண்டாம் இடத்திற்கு கொண்டுவந்துள்ளது என்று நம்பப்படுகிறது.
TRPயில் முன்றாம் இடத்தை பிடித்துள்ள சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலும் கடந்த வாரம் விறுவிறுப்பாக சென்றது என்றே கூறலாம். சந்தியா வீட்டை விட்டு வெளியேறுவது போன்ற காட்சிகள் இந்த சீரியலில் ஒளிபரப்பானது. அவரது நிலை என்ன ஆகும், சரவணன் சந்தியாவோடு மீண்டும் இணைவாரா போன்ற காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இதில் விஜய் டிவிக்கு கிடைத்த பெரிய அடியாக இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல். TRPயில் முன்னிலை வகித்த இந்த சீரியல் சட்டென டாப் 5 இடங்களில் கூட இல்லமால் காணாமல் போனது. அதற்க்கு மிக முக்கிய காரணம், சீரியலில் எந்த ஒரு புதிய விஷயங்களும் இல்லாததே என்று கூறப்படுகிறது. அதே போல பாரதி திருந்திவிட்டது போல ப்ரோமோ போட்டு பார்வையாளர்களை ஏமாற்றினால், யார் தொடர்ந்து சீரியலை பார்ப்பார்கள் என்று சீரியல் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.