கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான நடிகை தமன்னா, இந்தி, தெலுகு மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்கள் நடித்துள்ளார். பாகுபலி முதல் பாகத்தில் நடித்துள்ள இவரின் புகழ் உலகம் முழுக்க பரவியது.

தற்போது தமிழில் பெரிய அளவில் வாய்ப்பில்லை என்றல்லாம் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அதே போல சன் தொலைக்காட்சியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர் செஃப் நாகியை தெலுங்கில் தமன்னா தான் தொகுத்து வழங்குகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இவர் நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளிவந்த நவம்பர் ஸ்டோரி சீரிஸ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சூர்யா, கார்த்தி இப்படி பலரோடு இவர் இனைந்து நடித்துள்ளார்.

கேடி படத்தில் இவர் அறிமுகமாகி இருந்தாலும், கல்லூரி திரைப்படம் தான் இவரை அணைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்தது. இப்படி பல திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் H&M என்ற கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் கொடுத்த போட்டோ போஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த போட்டோவில் அவர், ஒரு சிறிய டிரௌசர் மற்றும் மேலாடை அணிந்தவாறு உள்ளார்.



