பெரிதும் எதிர்ப்பார்க்கப்ட்ட “சர்வைவர்” என்ற ரியாலிட்டி கேம் ஷோ ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கி உள்ளது. இதில் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் உட்பட 16 போட்டியாளர்கள் உள்ளனர். பெசன்ட் ரவி, விக்ராந்த், ஸ்ருஷ்டி டாங்கே, நந்தா, விஜயலட்சுமி, வி.ஜே. பார்வதி போன்றறோர் அவர்களில் சிலர். இந்த போட்டியில் வெல்பவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியின் விதிப்படி ஆரம்பத்தில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒரு தனி தீவில் விடப்படுவார்கள். சில அடிப்படை தேவைகளை தவிர மற்ற எல்லாவற்றையும் போட்டியாளர்களாகவே அந்த தீவில் இருந்து தேடி பெற வேண்டும். போக போக ஒவ்வொருவராக எலிமினேட் ஆவார்கள். ஒரு கட்டத்தில் போட்டியாளர்கள் தனித் தனியாக தீவில் வசிக்கும் நிலை உருவாகும், போட்டியும் கடுமையாகும்.
சமைப்பதற்கான உணவு முதல் பலவற்றை அவர்கள் தனியாகவே தேடும் நிலை உருவாகும். அதே சமயம் அங்கு நடைபெறும் சில போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு இம்யுநிட்டியும் வழங்கப்படும். அதை கொண்டு அவர்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் வி.ஜே. பார்வதி ஓர் இடத்தில் தடுக்கி விழுகிறார். அதை கண்டு ஸ்ருஷ்டி சிரித்திருப்பார் போல. இதனால் கடுப்பான பார்வதி, ஸ்ருஷ்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த ப்ரோமோ வீடியோ இதோ.
Yentha Chellathuku Support Panrathu-nu Teriyalaye.😶
SURVIVOR | Everyday 9.30 PM.#SurvivorTamil #Survivor #ZeeTamil #சர்வைவர் #ActionKingArjun @akarjunofficial pic.twitter.com/Q4dy8z7JJU
— Zee Tamil (@ZeeTamil) September 14, 2021
இந்த ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் பலர், வி.ஜே. பார்வதி, ஸ்ருஷ்டி என இருவருக்கும் சப்போர்ட் செய்யும் வகையில் தங்களது கமெண்டை பகிர்ந்தாலும், பார்வதியை அதிக அளவில் கழுவி ஊற்றி வருகின்றனர். அதில் சில கமெண்ட் இதோ.


பாரு நீ கவல படாத உன்ன அடுத்த ஜூலியா ப்ரோமோட் பன்றோம் கண்டெண்ட் மட்டும் டெய்லி குடு 🤘#SurvivorTamil
— ℳર.கௌசி𓃬 (@koshi_twits) September 14, 2021