தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திர ஜோடிகள் பிறமொழி திரைத்துறை போன்று திருமணம் செய்துக்கொண்ட சிறிது காலத்தில் விவகாராத்து பெறாமல் தங்களது வாழ்நாள் முழுவதும் ஒன்றாகவே சேர்ந்து வாழ்கின்றனர்.
உதராணமாக அஜித் – ஷாலினி, பிரசன்னா – சினேகா, சூர்யா – ஜோதிகா என பல தம்பதியர் உள்ளனர். சூர்யா – ஜோதிகா தம்பதியர் செய்யும் செயலை ரசிகர்கள் எப்போதும் கூர்ந்து கவனிப்பர். சூர்யாவும் ஜோதிகாவும் ஆரம்ப காலகட்டங்களில் பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த போது காதல் வயப்பட்டனர். அதன்பின் இருவரும் தங்களது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
சூர்யா தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துள்ளார். பாண்டியராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். பிப்ரவரி 4ஆம் தேதி திரைக்கு வருகிறது.
‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலிருந்து வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ஜனவரி 16ஆம் தேதி புதியப்பாடல் வெளியாகிறது.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக தமிழ் நட்சத்திரங்கள் பலர் தங்கள் குடும்பத்தினருடன் சேரந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதளத்தில் பதிவிட்டனர். அந்தவகையில், சூர்யா – ஜோதிகா பெங்கல் கொண்டாட்டத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…