சன்னி லியோன் என்ற பெயரை நம்மில் பலரும் காது வாக்கிலாவது கேட்டிருப்போம். கனடிய பாலிவுட் நடிகையான இவர், “ஜிஸம் 2” என்ற திரைப்படத்தின் மூலம் இந்திய திரையுலகில் காலடி பதித்தார். 2012 ஆம் ஆண்டு இந்த படம் இந்தி மொழியில் வெளியானது. அதனை தொடர்ந்து அவர் பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

இவர் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு முன்பே இந்தி பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு ஒரு கலக்கு கலக்கினார். 49 ஆம் நாள் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த இவர், 91 ஆம் நாள் அங்கிருந்து வெளியேறினார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது இவருக்கு கிடைத்த பட வாய்ப்பு தான் ஜிஸம் 2.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை தொடந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. கலர்ஸ் தொலைக்காட்சிக்கு எதிராக புகார்கள் கூட அந்த சமயத்தில் கொடுக்கப்பட்டது குறிப்பிட தக்கது. இவர் நடித்த ஜிஸம் 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வணிக ரீதியாக நல்ல லபமாகவே இருந்தது.
அதனை தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் இவருக்கு குவிய தொடங்கின. கடந்த 2011 ஆம் ஆண்டு டேனியல் வேபர் என்பவரோடு இவருக்கு திருமணமானது. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த ஜோடி தங்கள் முதல் குழந்தையை மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து தத்தெடுத்தனர்.

அதன் பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த ஜோடிக்கு இரட்டை குழந்தை பிறந்தது. தபோது இவர்கள் 3 குழந்தைகளோடு உள்ளனர். சன்னி லியோன் இந்தி படங்கள் மட்டும் இன்றி தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். ஏற்கனவே கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வடகறி படத்தில் இவரை நாம் பார்த்திருப்போம்.