Homeபொழுதுபோக்குஎன் பிள்ளையை இப்படி சொல்லிக்கொடுத்து வளர்ப்பேன். சிவகார்த்திகேயனின் இந்த பேச்சால் குவியும் பாராட்டு

என் பிள்ளையை இப்படி சொல்லிக்கொடுத்து வளர்ப்பேன். சிவகார்த்திகேயனின் இந்த பேச்சால் குவியும் பாராட்டு

சினிமாவை பொறுத்தவரை யார் எப்போது உச்சநிலைக்கு செல்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதற்க்கு சிவகார்த்திகேயன் விதிவிலக்கல்ல. ஆரம்ப காலத்தில் விஜய் டீவியில் பணியாற்றிய இவர், தனது கடின உழைப்பின் மூலம் படிப்படியாக வளர்ந்து இன்று ஒரு உச்ச நட்சத்திர அந்தஸ்தை பிடித்துள்ளார். இவருக்கென இப்போது ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

sivakarthikeyan

சிவகார்த்திகேயனை பொறுத்தவரை இன்றைய தலைமுறை பிள்ளைகள் பலர் அவருக்கு தீவிர ரசிகர்களாக உள்ளார்கள். அவருடைய படமும் சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் அவரை அனைவரையும் கவரும் வகையில் தான் வெளிவருகிறது.

இப்படியான சூழலில் சிவகார்த்தியேன் எது சொன்னாலும் அது நிச்சயம் பலதரப்பட்ட மக்களை சென்றடையும் என்பதில் ஐயம் இல்லை. இந்த நிலையில் சிவார்த்திகேயேன் தன் மகனை எப்படி வளர்க்க போகிறேன் என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

sivakarthikeyan

அவர் கூறியதாவது, பெண்களின் உலகம் மிகவும் அழகானது. அது மேலும் அழகாக மாறுவது ஆண்களின் கையில் தான் உள்ளது. பெண் பிள்ளைகளுக்கு எப்படி குட் டச், பேட் டச் போன்ற விடயங்களை சொல்லி தருகிறோமோ அப்படி ஆண் பிள்ளைகளுக்கும் ஒரு பெண்ணிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை சொல்லி தரவேண்டும். என் மகனுக்கு நான் இதை நிச்சயம் சொல்லி தருவேன் என்று கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஒரு மகள் உள்ள நிலையில் தற்போது சில மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு ஒரு மகன் பிறந்தார். சிவகார்த்திகேயனின் இந்த கருத்திற்கு பலதரப்பட்டவர்களுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்