Homeபொழுதுபோக்குசமந்தாவின் விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து அவரின் முன்னாள் காதலர் சித்தார்த் போட்ட நக்கலான ட்வீட்.

சமந்தாவின் விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து அவரின் முன்னாள் காதலர் சித்தார்த் போட்ட நக்கலான ட்வீட்.

நாக சைதன்யா மற்றும் சமந்தா தங்கள் திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள போவதாக நேற்று தெரிவித்திருந்தனர். இதனால் பலரும் அவர்களின் பிரிவுக்கு காரணம் என்ன என்று தேடி வருகின்றனர். அவர்கள் இதை அறிவிப்பதற்கு முன்பாகவே கடந்த ஒரு மாத காலமாக அவர்கள் பிரிய போகிறார்கள் என்ற செய்தி வெளியாக தொடங்கியது. தற்போது அவர்கலாகவே அதை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

Samantha wedding
samantha naga chaitanya wedding

இந்த நிலையில் சமந்தாவின் முன்னாள் காதலரான நடிகர் சித்தார்த் அவர்கள் தனது ட்விட்டர் கணக்கில் ஒரு டீவீட்டை போட்டுள்ளார். அதில் அவர், “ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள், நான் என் பள்ளி ஆசிரியரிடம் கற்றுக்கொண்ட முதல் பாடங்களில் இதுவும் ஒன்று” என்று கூறியுள்ளார்.

இந்த டீவீட்டை கண்ட பலர், சித்தர் அந்த டீவீட்டில் சமந்தாவை தான் குறிப்பிடுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். அதே போல, உங்களுக்கு ஏன் இவளவு வெறுப்பு, மனிதர்கள் தவறு செய்வது இயல்புதான் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சமந்தா சித்தார்த் ஜோடி பிரிந்த போதும் சித்தார்த் ஒரு ட்வீட் செய்திருந்தார்.

இதையும் படிக்கலாம்: கவர்ச்சி தோற்றத்தில் ட்ரைலரிலேயே மிரட்டும் ராஷ்மிகா மந்தனா. 5 மொழிகளில் விரைவில் வெளியாக உள்ள புஷ்பா திரைப்படம்.

அதில் அவர், “நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையில் இருக்கும் ஒரு தெருநாய்க்கு தான் கிடைக்கும் என்றால் அதை யாராலும் மாற்ற முடியாது என்று தெரிவித்திருந்தார்”. சித்தார்த்தின் இத்தகைய ட்வீட் குறித்து அப்போதே பத்திரிகையாளர் ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்புகையில், இது என் படத்தில் வரும் ஒரு வசனம். அதை தான் நான் ட்வீட் செய்திருந்தேன் என்று கூறி இருந்தார். சித்தார்த்தின் அப்போதைய டீவீட்டையும் பலர் இப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Siddharth tweet
Siddharth tweet

சித்தார்த் மற்றும் சமந்தா இருவரும் ஜபர்தஸ்த் என்ற தெலுங்கு படத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு இனைந்து நடித்தனர். அந்த சமயத்தில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. ஆனால் அந்த காதல் வெகு காலம் நீடிக்கவில்லை. சீக்கிரத்திலேயே அவர்கள் பிரிந்துவிட்டனர். அதன் பிறகு தான் சமந்தா நாக சைதன்யாவை காதலித்து மணந்துகொண்டார் என்பது குறிப்பிட தக்கது.

சற்று முன்