தமிழ் சினிமாவை பொறுத்தவரை பேபி ஷாலினி மற்றும் ஷாமிலியை மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு இவர்கள் குழந்தை நட்சத்திரங்களாக பல்வேறு படங்களில் நடித்துள்ளனர். தமிழ் மட்டும் இன்றி மலையாளம், கன்னடம் இப்படி வேறு மொழிப்படங்களில் இவர்கள் நடித்தனர். 90களில் இவர்களுக்காகவே படம் பார்க்க மக்கள் திரையரங்கிற்கு வரும் நிலை இருந்தது.

அஞ்சலி படத்திற்காக, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்க்கான தேசிய விருதை பெற்றிருந்தார் பேபி ஷாமிலி. இவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் பல்வேறு ஹீரோக்களுக்கு ஜோடியாக படங்களை நடிக்க துவங்கினர். ஷாலினி, தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு, அமர்க்களம், அலைபாயுதே இப்படி பலவேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தான் அவருக்கும் அஜித்துக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பிறகு, ஷாலினி படங்களில் நடிப்பதில்லை. ஷாலினியை போலவே ஷாமிலியும் பல்வேறு ஹீரோக்களோடு நடித்துள்ளார். ஓய் என்ற தெலுங்கு படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக முதன்முதலில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த வீரசிவாஜி படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். சில காலம் நடிப்பிற்கு இடைவெளி விட்ட இவர் அவ்வவ்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் பதிவிட்ட ஒரு புகைப்படத்தில், எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளதாக தெரிகிறார். ஏதாவது படத்துக்காக இவர் இப்படி மாறி இருக்கிறாரா, இல்லை காரணம் இல்லாமல் எடையை குறைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை. இதை கண்ட ரசிகர்கள் பலர், என்ன இது ஆளே மாறிட்டீங்க என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.