தமிழ் திரையுலகத்தை பொறுத்தவரை சிலர் ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடிகளாக மாறியுள்ளனர். அந்த வரிசையில் இடம்பிடித்த ஜோடி தான் ஆர்யா, சாயிஷா ஜோடி. கடந்த 2005 ஆண்டு இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளிவந்த அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா. அதே போல 2017 ஆண்டு வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சாயிஷா.

ஆர்யா, சாயிஷா இருவரும் சேர்ந்து கஜினிகாந்த் படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது அவர்கள் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதனை தொடர்ந்து இரு வீட்டாரின் சம்மததோடு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பிறகு ஆர்யா, சாயிஷா இருவரும் டெட்டி படத்தில் நடித்து, அந்த படம் மெகா ஹிட் ஆனது நாம் அறிந்ததே. இப்படி இந்த ஜோடியின் காதல் வாழ்க்கை, கல்யாண வாழ்க்கை, சினிமா வாழ்க்கை என எல்லாமே சிறப்பாக இருக்க, சமீப காலமாக சாயிஷா இன்ஸ்டாகிராமில் எந்த ஒரு புகைப்படத்தையும் பதிவிடாமல் இருந்தார்.

அதற்க்கு மிக முக்கிய காரணம் அவர் கர்பமாக இருந்தது தான். தற்போது குழந்தை பிறந்துள்ள நிலையில், சாயிஷா தன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். “நான் வந்துட்டேன்னு சொல்லு, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்பது போல முன்போலவே அதே அழகோடு, உடற்பயிற்சி மூலம் எடையை குறைத்து முன் போலவே இருக்கிறார் சாயிஷா. இதோ அந்த புகைப்படம்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், பிரசவத்திற்கு பிறகு நீங்கள் வெளியிடும் முதல் போட்டோ இது தானே, குழைந்தை எப்படி இருக்கிறது? இப்படி பல கேள்விகளால் தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.