தமிழ் சினிமாவை பொறுத்த வரை சில நடிகர்கள் மட்டும் தான் எந்த ஒரு வேடத்திற்கும் பொறுந்துவார்கள். அப்படி பட்டவர்களில் ஒருவர் தான் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லனாக நடித்த இவர் போக போக ஹீரோ கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார். இவர் வில்லனாக நடித்து வெளியான பல படங்கள் இன்றுவரை பேசப்படுகிறது. அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்திருப்பார்.

100வது நாள், மிஸ்டர் பாரத் போன்ற படங்கள் இவரது வில்லன் நடிப்பிற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். அதே சமயம் படிப்படியாக ஹீரோ நிலையை எட்டியம் பிறகும் இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அமைதிப்படை, வால்டர் வெற்றிவேல், என் பொம்மிக்குட்டி அம்மாவுக்கு போன்ற படங்கள் எல்லாம் இன்றுவரை ரசிக்கும் படியாக இருக்கும்.
இவர் கௌண்டமணியோடு சேர்ந்து பல படங்களில் காமெடியில் கலக்கி இருப்பார். கோயம்பத்தூரை பூர்வீகமாக கொண்ட இவருடைய பேசியில் இயல்பாகவே குசும்பு இருக்கும். சமீபத்தில் இவர் பல படங்களில் குணச்சித்திர வேடம் பூண்டு நடித்துவருகிறார். பாகுபலி படத்தில் இவர் நடிப்பு உலகம் முழுவது பேசப்பட்டது என்று கூறலாம்.

கட்டப்பா கதாபாத்திரம் இவரை தவற வேறு யாருக்கும் அவ்வளவு கட்சிதமாக பொருத்தி இருக்காது என்று பலர் கூறி நாம் கேட்டிருப்போம். இப்படி நடிப்பில் பன்முக தன்மையை வெளிப்படுத்தும் சத்யராஜ் ஆரம்ப காலத்தில் தான் சினிமாவில் நடிக்க துவங்கியபோது தனக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது என்பதை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் என்னுடைய சம்பளம் 500 முதல் 1000 ரூபாய் வரை தான் இருந்தது. அதிகபடச்சமாக முதன் முதலில் டி.ராஜேந்தர் தான் தங்கைக்கோர் கீதம் என்னும் படத்திற்காக எனக்கு 4000 ரூபாய் சம்பளமாக வழங்கினார் என்று கூறியுள்ளார் சத்யராஜ்.