“பாகுபலி” இயக்குநர் ராஜமவுலியின் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “ஆர்ஆர்ஆர்”. பெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், ராம் சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஷ்ரயோ சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. தமிழில் இப்பட்டத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.
“ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தின் பாடலான “நாட்டு கூத்து” சமூகவலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகியுள்ளது. இப்பாடலுக்கு பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை நடனமாடி அதன் வீடியோக்ககளை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.
“ஆர்ஆர்ஆர்” திரைப்படம் முதலில் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்து அதற்கான விளம்பர பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து பல திரையரங்குகளில் படத்திற்கான முன்பதிவு டிக்கெட் விற்பனையும் ஆரம்பமானது.
இந்நிலையில், தற்போது ஒமைக்ரான் பரவல் காரணமாக பல மாநில அரசுகள், திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
இதனால் படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதால், “ஆர்ஆர்ஆர்” படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் ஒத்திவைத்துள்ளனர். இதையடுத்து “ஆர்ஆர்ஆர்” படத்திற்கு ரசிகர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுக்கான கட்டணத்தை திரையரங்குகள் திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
“ஆர்ஆர்ஆர்” ராஜமவுலியின் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், முன்பதிவு டிக்கெட்டுகளும் பல கோடி ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது அந்த கட்டணத்தை ரசிகர்களுக்கு திருப்பி செலுத்தி வருகையில், முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுக்கான சேவை கட்டணம் மட்டும் கோடிக்கணக்கில் வசூலாகியுள்ளது. இதையடுத்து ஆர்ஆர்ஆர் படம் திரைபயரங்குகளில் வெளியாகாமலே பல கோடி ரூபாயை சம்பாதித்துள்ளது.
அந்த ஒத்த பெயருக்கு கொட்டோ கொட்டுனு கொட்டிய துட்டு…வெளியாகும் முன்பே பல
கோடி சம்பாதித்த “ஆர்ஆர்ஆர்”