சூப்பர் ஸ்டார் ரஜிகாந்த் நடித்திருக்கும் அண்ணாத்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இலையில் அந்த படத்தின் எடிட்டர் ரூபன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் அதன் விவரம் இதோ.

மோஷன் போஸ்டர் vfx-ல ரிலீஸானது. அதுல என்னோட வேலை குறைவுதான். படத்தோட டீசர் மற்றும் டிரெயிலர் எடிட் பண்ணப் போறது எனக்கே எக்ஸைட்மென்ட்டா இருக்கு. குறிப்பா ரசிகர்கள் நிறைய எதிர்பார்க்கிறாங்க. முந்தைய படத்தோட ரெக்கார்டை பிரேக் பண்ணணும்னு சொல்றாங்க. இதுவே எனக்கு பெரிய அழுத்தமா இருக்கும்.
இப்படி எதிர்ப்பார்க்கிற ரசிகர்களின் மனநிலையைப் பூர்த்திசெய்யுற மாதிரிதான் டீசர், டிரெய்லர் இருக்கும். கண்டிப்பா மாஸா இருக்கணும்னு நினைக்குறேன். அதே நேரத்துல குழந்தைகள், பெரியவங்கன்னு எல்லாரும் ரசிக்கணும்னு நினைச்சுக்கிட்டிருக்கேன். வெயிட் பண்ணுவோம்.”
“சினிமாவுக்குள்ள வந்து கிட்டத்தட்ட 10 வருஷம் ஆகிடுச்சு. இப்போ, என்னோட வாழ்க்கையில நிறைய அனுபவங்களைச் சேர்த்திருக்கேன். ஸ்கூல் படிச்ச காலத்துல ஆட்டோ மொபைல் இன்ஜினீயர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அதுக்கு நிறைய படிக்க வேண்டியதா இருந்தது.
வெறும் புத்தகத்தைப் படிச்சிட்டு, எக்ஸாம் எழுதி பாஸ் ஆகுறது ரொம்ப கஷ்டமா இருந்தது. ப்ளஸ் டூ கூட ஜஸ்ட் பாஸ்தான். வீட்டுல தாத்தா, அப்பா எல்லாரும் இசைத்துறையைச் சேர்ந்தவங்கதான். நிறைய மேடைகள்ல கச்சேரி நடத்தியிருக்காங்க. எனக்கும் இசையில ஆர்வம் இருந்தது. ஆனா வீட்டுல, `நாங்கபடுற கஷ்டமே போதும். நீயும் மியூசிக் சார்ந்து படிக்க வேண்டாம்’னு சொல்லிட்டாங்க. இப்படி பல தகவலைகளை அவர் பகிர்ந்துள்ளார்.