பொழுதுபோக்கு

அச்சச்சோ விஜய் டிவியில் இந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் போட்டால்! நான் தெறிச்சு ஓடிடுவேன் ரம்யா பாண்டியனின் பகீர் பேட்டி

ரம்யா பாண்டியன் அவர்கள் விஜய் டிவியின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னரே பல போட்டோஷூட் மூலம் பிரபலமாகவே இருந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக அந்த மாடி போட்டோஷூட் இன்றுமே வைரலாகி கொண்டு தான் இருக்கிறது. சோஷியல் மீடியாவில் மட்டுமே வலம் வந்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சிக்கு போட்டியாளராக அழைக்கப்பட்டிருந்தார். குக் வீத் கோமாளி தொடங்கிய முதல் சீசன் மிகவும் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் சிறப்பான வகையில் பங்கேற்றனர்.

Ramya pandiyan

அதேபோல ரம்யாவும் தன் பங்கிற்கு ஏற்ற வகையில் அனைத்து போட்டிகளிலுமே மிக சிறப்பாக பங்கேற்று தன்னை ஒவ்வொரு களத்திலும் நிரூபித்து கொண்டு வந்தார். மேலும் அந்நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர் கூட்டத்தை தனக்கென்று அமைத்துக்கொண்ட ரம்யா பாண்டியன், அதன் பின்னர் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக நடைபெற்று கொண்டிருந்த பிக் பாஸ் சீசன்4 போட்டிக்கு பங்கேற்பாளராக விஜய் டிவியின் மூலம் உள்ளே அனுப்பப்பட்டார்.

பிக் பாஸ் நான்கு சீசன் தொடக்கத்தில் ரசிகர் கூட்டத்தின் மிகப்பெரிய ஆதரவைப் பெற்ற அவர் நாட்கள் செல்ல செல்ல அவரது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினார். ஆரம்பத்தில் பிக் பாஸ் சீசன் 4ன் வெற்றியாளர் என்று அனைவராலும் நம்பப்பட்ட ரம்யா பாண்டியன் பின்னர் அவரின் சில சுயநல குணத்தால் அந்தப் போட்டியின் இறுதி வரை மட்டுமே பயணிக்க முடிந்தது.

ஆனால் தற்பொழுது அவர் ஒரு சில படங்களில் ஹீரோயினாகவும் தலை காட்ட ஆரம்பித்திருக்கிறார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று பல கதைகள் கேட்டுக்கொண்டு வருகிறார்.

ரம்யா பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்பொழுது அவருக்கு பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒருவர் நீங்கள் மீண்டும் பிக் பாஸ் அல்லது குக் வித் கோமாளி போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு வந்தால் எந்த நிகழ்ச்சிக்கு செல்வீர்கள் என்பதே இந்த கேள்வி.

Ramya pandiyan Bigg boss

அதற்கு சற்றும் யோசிக்காத ரம்யா பாண்டியன், கண்டிப்பாக நான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவே மாட்டேன். ஒருமுறை நான் சென்று பட்டதே போதும். மீண்டும் அந்த நிகழ்ச்சிக்கு நான் செல்ல மாட்டேன். என் வீட்டில் டிவியில் அதை பார்த்தாலே நான் தெரித்து ஓடி விடுவேன் என்று அவர் கூறினார். மேலும் அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மட்டும் செல்வேன், ஏனென்றால் அந்த நிகழ்ச்சி மிகவும் நகைச்சுவை மற்றும் சமையலில் பல யுக்திகளை கற்றுக் கொள்ளும் போட்டி எனவே அதற்கு மட்டும் நான் செல்வேன் என்று தனது கேள்விக்கான பதிலை ரம்யா பாண்டியன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

Saravanan

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago