பாலிவுட் வட்டாரத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராதிகா ஆப்தே அவர் பாலிவுட்டில் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார் தமிழ் படங்களான தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா,வெற்றிச்செல்வன், போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த கபாலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானார். ஆனால் கபாலி படம் வெற்றி பெற்ற நிலையிலும் ராதிகா ஆப்தே விற்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அந்த அளவிற்கு அமையவில்லை என்றே கூறலாம்.

ராதிகா ஆப்தே தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்திருந்த போதிலும் இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் படு மோசமாக உடை அணிந்து புகைப்படங்களை பதிவிடுவதும், நடிகர்களால் அவ்வப்போது தொல்லை ஏற்படுகிறது என்றும் அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையை கிளப்பி கொண்டே இருப்பார்.
அந்த வரிசையில் தற்போது யாரும் எதிர் பார்க்காத வகையில் மிகப் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறார். தனக்கு திருமணமாகி விட்டது என்றும் இங்கிலாந்தை சேர்ந்த பெனடிக் டைலர் என்ற இசை கலைஞரை கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்து விட்டேன் என்றும் தற்போது ஒரு பேட்டியில் தானே கூறியிருக்கிறார். ஆனால் எனக்கு திருமணத்தில் நம்பிக்கையே கிடையாது ஆனால் நீங்கள் கேட்கலாம் திருமணத்தில் நம்பிக்கை இல்லாமல் ஏன் திருமணத்தை செய்து கொண்டீர்கள் என்று நான் திருமணம் செய்து கொண்டதே என்னுடைய விசாவிற்காக தான்.
வெளி நாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால் உடனே விசா கிடைத்து விடும்அதற்காகவே நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் எப்பொழுதெல்லாம் என் கணவரை பார்க்க வேண்டுமோ அப்பொழுது எல்லாம் நான் சென்று அவரை பார்த்துவிட்டு வருகிறேன் என அவர் அப்பேட்டியில் தெரிவித்திருந்தார்.

ராதிகா ஆப்தே ஒரு விசா பெறுவதற்காக திருமணம் செய்துகொண்டது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நமது இந்திய நாட்டில் திருமணம் என்பது மிகப் புனிதமாகக் கருதப்பட்டு வருகின்றது, இந்நிலையில் நடிகை ராதிகா ஆப்தேவின் இந்த திருமண சர்ச்சை பாலிவுட் வட்டாரத்தில் மிகப் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.