Rashmika mandana
தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான அல்லு அர்ஜுன் நடிக்கும் அனைத்து படங்களுமே பெரிய அளவில் வியாபார ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டும் படமாகவே உள்ளது. தற்போது அவர் நடித்து வரும் புஷ்பா என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகி உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன. புஷ்பா திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படத்தில் லாரி டிரைவர் வேடத்தில் நடித்துள்ள அல்லு அர்ஜுன் தனது கேரக்டரை மிக அருமையாக நடித்திருக்கிறார் என்று இயக்குனர் சுகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் செம்மரக்கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் மரங்களை கடத்துபவராக அல்லு அர்ஜுன் நடித்திருக்கிறார். இவருக்கு வில்லனாக சற்றும் எதிர்பாராத வகையில் மலையாள திரைப்படத்தின் உச்ச நடிகரான பகத் பாசில் நடித்திருக்கிறார். பகத் பாசில் ஏற்கனவே தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் என்ற படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகி இருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இணையாகவும், மேலும் சொல்லப்போனால் சிவகார்த்திகேயனை விடவும் கை தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருப்பார். அவரின் வில்லத்தனம் அந்த படத்திற்க்கு மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருந்தது என்றே கூறலாம்.
தற்போது அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் கூட்டணி எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துளளது. மேலும் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். ஒரே படத்தில் ஒட்டுமொத்த தெலுங்கு ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்த ராஸ்மிகா மந்தனா இப்படத்திலும் தனது நேர்த்தியான நடிப்பை வெளியிடுத்துவார் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் ஒவ்வொரு நடிகர்களின் ஃபர்ஸ்ட்லுக் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராஷ்மிகா மந்தனாவின் பிக்சர் மிகவும் வித்தியாசமான முறையில் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா அமர்ந்துகொண்டு காதில் ஏதோ அணிவது போன்று உள்ளது அந்த டீசர். இவர் இப்படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடப் போகிறார்கள். முதல் பாகம் டிசம்பர் 17ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. முந்தைய படங்களில் மிகவும் அழகான தோற்றத்துடன் சாக்லேட் பாயாக வலம் வந்த அல்லு அர்ஜுன் இப்படத்தில் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடித்து இருப்பதால் அவரது ரசிகர்கள் இப்படத்தை மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…