சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியானப்படம் ‘புஷ்பா’. செம்மர கடத்தலை மையமாக கொண்ட இப்படத்தில் காதல், ரொமான்ஸ், அதிரடி சண்டைக்காட்சி என ரசிகர்களுக்கு அனைத்து விதத்திலும் கவர்ந்தது.
‘புஷ்பா’ படத்தில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியும் இருந்தார். டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான புஷ்பா, ஜனவரி 7ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியானது. தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்தியாவின் அனைத்துதரப்பிலிருந்தும் புஷ்பா திரைப்படம் பாராட்டை பெற்றது. இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரம் ரசிகர்களை ரசிக்க வைத்தது. இந்நிலையில், புஷ்பா படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் வாங்கிய ஊதியம் குறித்தான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த தகவலின் படி, அல்லு அர்ஜூன் ரூ. 18 முதல் 20 கோடி வரை வாங்கியிருக்கலாம் எனவும் ராஷ்மிகா ரூ. 8 கோடி, பகத் பாசில் ரூ.3.5 கோடி, சமந்தா ரூ.1.5 கோடி வாங்கியிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை ‘புஷ்பா’ திரைப்படம் ரூ.340 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள புஷ்பா திரைப்படத்தின் அடுத்த பாகம் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…