Homeடிவிகாற்றுக்கென்ன வேலி சீரியலில் நடிக்கும் நடிகைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. இனி இவர் காட்டில் மழை...

காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடிக்கும் நடிகைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு. இனி இவர் காட்டில் மழை தான்.

தற்போது விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி சீரியல் மக்களின் மனதை மிகவும் கவர்ந்து வரும் வரும் சீரியலாக உள்ளது. அதில் ப்ரியங்கா குமார் வெண்ணிலா என்னும் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

காற்றுக்கென்ன வேலி:
விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி என்ற நாடகத்தில் வெண்ணிலா கதாபாத்திரம் வீட்டில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் வேலையில் தான் ஐஏஎஸ் ஆகவேண்டும் என்ற கனவுகளோடு அப்பாவின் விருப்பத்திற்கு மாறாக அம்மாவின் ஆசியோடு வீட்டை விட்டு வெளியேறிய பின்பு பல்வேறு வகையில் பிரச்சனைகள் வருகிறது.

ஆரம்பத்தில் ஹீரோ ஹீரோயினுக்கு எதிராக இருந்தாலும் பின்பு வெண்ணிலாவின் மனநிலையை புரிந்துகொண்டு ஹீரோ அவருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். அதில் ஏற்கனவே கதாநாயகனாக நடித்தவர் சீரியல் இருந்து விலகி இருந்தார். பிறகு கதாநாயகனின் அம்மாவாக நடித்த வரும் விலகியிருந்தார். தற்போது மாளவிகா அவினாஷ் அவர்கள் கதாநாயகனின் அம்மாவின் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாடலிங்கில் பிரியங்கா குமார்:
பிரியங்கா குமார் தனது 15 வயதில் மாடலிங் பணியை செய்ய ஆரம்பித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த “மேக்ஸ் லைட் மாடல் லுக் இந்தியா” என்கிற போட்டியால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் அவருக்கு கன்னடத்தில் ஸ்டார் ஸ்வர்ணா என்ற சேனலில் கிருஷ்ணதுளசி என்ற நாடகத்தில் வாய்ப்பு கிடைத்தது.

சன் டிவியில் ஒளிபரப்பான சாக்லேட் என்னும் நாடகத்தில் இனியா என்ற கதாபாத்திரத்தில் இவர் பிரபலம் ஆனார். தற்போது இவருக்கு கன்னட படத்தில் ஹீரோயினாக வாய்ப்பு கிடைத்துள்ளது. “ஆதுரி லவ்வர் ” என்ற படத்தில் நடித்த கதாநாயகன் வீராட் அவருடன் கதாநாயகியாக இணைய உள்ளார். பிரியங்கா குமாருக்கு ஹீரோயினாக இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் பெங்களூர், மைசூர் கோவா போன்ற இடங்களில் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. தெலுங்கு மற்றும் கன்னடத்தில் இப்படம் எடுக்கப்போவதாக தகவல்கள் கசிந்துள்ளது ஆனாலும் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

சற்று முன்