வெறும் 3.9 லட்சத்திற்கு வாங்கி 100 மடங்கு லாபம் தந்த பிரசாந்தின் திரைப்படம். எந்த படம் தெரியுமா? 30 வருடம் கழித்து வெளியான தகவல்.

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவை பொறுத்த வரை இந்த அளவிற்கு படங்கள் வெளியாவது கிடையாது. ஒரு சில படங்களே வெளியாகும். அந்த படங்கள் நன்றாக இருந்தால் அவை 100 நாட்களை கடந்து ஓடும். சில படங்கள் வருடக்கணக்கில் கூட ஓடியதுண்டு. அதே போல தயாரிப்பாளர்களுக்கும், டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கு அது போன்ற படங்கள் நல்ல லாபத்தையே தந்துள்ளன.

thirupoor subramaniyam

அந்த வகையில் திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய ஆரம்பகாலத்தில் தனக்கு மிகப்பெரிய லாபங்களை கொடுத்த சில படங்களை பற்றி கூறியுள்ளார். அதில் சில படங்கள் 100 மடங்கு லாபத்தை கூட பெற்றுத்தந்துள்ளன என்று தெரிவித்திருந்தார்.

அவர் கூறுகையில், கார்த்திக் நடிப்பில் கடந்த 1989 ஆம் ஆண்டு வெளியான படம் பாண்டி நாட்டுத் தங்கம். இந்த படத்தை நான் வேறொருவரிடம் இருந்து 4.5 லட்சம் கொடுத்து வாங்கினேன். இது கிட்டத்தட்ட 18 முதல் 20 லட்சம் வரை கலக்ட் செய்தது என்று தெரிவித்திருந்தார். அதே போல பிரசாந்த் நடிப்பில் வெளியான வைகாசி பொறந்தாச்சு படத்தையும் இவர் தான் வெளியிட்டார்.

prasanth

அது குறித்து கூறுகையில், நான் வைகாசி பொறந்தாச்சு படத்தை ஆரம்பத்தில் 3.9 லட்சம் கொடுத்து வாங்கினேன். அதன் பிறகு படம் ரிலீஸ் ஆவதற்கு 1 வாரத்திற்கு முன்பு வேறொருவர் வந்து அந்த படத்தை என்னிடம் கேட்டார். நான் அவருக்கு 2 லட்சம் லாபத்தில் விற்றுவிட்டேன். பிறகு படம் ரிலீஸ் ஆனது. அந்த சமயம் அது இரண்டு சென்டர்களில் தான் ரிலீஸ் ஆனாது. காரணம் திரையரங்குகள் பெரிதாக கிடைக்கவில்லை. ஆனாலும் வெளியிட்டவரை அது நன்றாக ஓடியது. இதனால் அவரிடம் பலர் சென்று இதை என்னக்கு விற்றுவிடுங்கள் என்று கேட்டுள்ளனர்.

அதன் பிறகு அவர் என்னிடம், இதை நீங்களே வாங்கிக்கொள்கிறீர்களா என்று கேட்டார். நானும் சரி என்று கூறி அதை 9 லட்சம் கொடுத்து மீண்டும் வாங்கினேன். அந்த படம் 39 லட்சம் கலெக்ட் செய்தது. கிட்டத்தட்ட 100 சதவிகிதம் லாபம் தந்த படம் அது என்று கூறியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள்.

Leave a Comment