Homeமூவிகள்இது என்னடா பொன்னியின் செல்வன் படத்திற்கு குதிரையால் வந்த புது சிக்கல். குழப்பத்தில் படக்குழு.

இது என்னடா பொன்னியின் செல்வன் படத்திற்கு குதிரையால் வந்த புது சிக்கல். குழப்பத்தில் படக்குழு.

சிறந்த இயக்குனர்கள் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவதில் ஒருவர் இயக்குனர் மணிரத்னம். இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை என பலத்துறைகளில் தன் திறமையால் தமிழ் சினிமாவில் இடம் பிடித்த இவர், அடுத்த தலைமுறையினரும் ரசிக்கும் அளவிற்கு படம் எடுப்பதில் வல்லவர் என்றே கூறலாம். ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களை கொண்டு இயக்கிய இவருடைய இயக்கத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று இன்றளவும் காத்திருக்கும் நடிகர்கள் பலர்.

Ponniyin Selvan

இந்த நிலையில், ஒரு மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தையே கொண்டு, அமரர் கல்கியின் கைவண்ணத்தில் உருவான பொன்னியின் செல்வன் என்னும் மிகசிறந்த தமிழ் நாவலை அடிப்படையாக கொண்டு பொன்னியின் செல்வன் என்ற ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார் மணிரத்தினம்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஷ்வர்யா ராய், ஜெயராம் இப்படி பல நடிகர்கள் நடித்துவரும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள
இந்த திரைப்படத்தில், எதிர்பாராத சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் ஸ்டூடியோவில் நடக்கும் படப்பிடிப்பில் குதிரைகள் இடம்பெற்றுள்ளன.

kuthirai

சமீபத்தில் அந்த படப்பிடிப்பின்போது ஒரு குதிரை இறந்துவிட்டதாக செய்தி வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மறுபடியும் இதுபோன்று சுமார் 8 குதிரைகள் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொன்னியின் செல்வன் படக்குழு சிக்கலில் உள்ளது.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்காக இந்த குதிரைகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தபட்ட நிலையில், இந்த 8 குதிரைகளும் தட்ப வெப்பநிலை காரணமாக உயிரிழந்துள்ளது என கூறப்படுகிறது. வாடகைக்கு எடுக்கப்பட்ட குதிரைகள் திடீரென இறந்து போனதால், குதிரைகளின் உரிமையாளர்கள் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டி, தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளனர் என்று சொல்லப்படுகிறது. இதனால் இயக்குனர் மணிரத்தினம் உள்ளிட்ட பலர் குழப்பத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

சற்று முன்