3 வருடங்கள் கழித்து மிஸ்கின் படத்திற்காக பியானோவில் கைவைத்த இளையராஜாவின் மகன். எந்த படத்திற்கு தெரியுமா? வெளியான சூப்பர் பாடல் இதோ.

இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் பிசாசு 2 என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்தின் முதல் டீசர் வெளியாகி அனைத்து ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஏற்கனவே மிஸ்கின் அவர்கள் பிசாசு 2வின் முதல் பாகமான பிசாசு படத்தை வெளியிட்டிருந்தார். இப்படத்தில் அனைத்து முகங்களும் புதுமுகங்களாக இருந்தனர். ராதாரவி மிக முக்கிய வேடத்தில் இப்படத்தில் நடித்திருந்தார். மிஷ்கின் ஜோனரிலிருந்து சற்று வித்தியாசமான கதை களத்தை கொண்ட இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் ஒரு பாடல் அனைத்து ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

pisasu2

இதைத்தொடர்ந்து மிஷ்கின் அவர்கள் பிசாசு படத்தின் இரண்டாம் பாகமான பிசாசு2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆண்ட்ரியா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஆண்ட்ரியா சுந்தர் சி இயக்கிய அரண்மனை என்ற படத்தில் பேயாக நடித்து இருப்பார்.

அவரின் நடிப்பு அனைத்து ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்திலும் அவர் பேயாக நடித்து இருப்பாரோ என்ற சந்தேகம் அவரது ஃபர்ஸ்ட் டீசர் வெளியானதும் ரசிகர்களிடையே வந்துள்ளது. ஃபர்ஸ்ட் போஸ்டரில் மிகவும் மிரட்டலான தோரணையில் ஆண்ட்ரியா படங்கள் வெளியாகி உள்ளது.

actor

இப்படத்தில் முக்கிய ரோலில் மக்கள் நாயகன் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார் என்று இயக்குனர் அவர்கள் உறுதியான செய்தியை தெரிவித்து இருக்கிறார். விஜய் சேதுபதி 16 நிமிடங்கள் இப்படத்தில் தோன்றினாலும் அவரது கேரக்டர் மக்கள் மனதில் ஆழப் பதியும் அளவிற்கு அவரது நடிப்பும் கேரக்டரும் இப்படத்தில் அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் பூர்ணா, நமிதா, கிருஷ்ணகுமார், ராஜ்குமார் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த படத்திற்கு கார்த்திக் ராஜ இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் லிரிக் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படைவீரன் படத்துக்காக கார்த்திக் ராஜா இசை அமைத்திருந்தார். தற்போது கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து அவரது இசையில் ஒரு பாடல் வந்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடி உள்ளார். உச்சந்தல ரேகையில் என்று தொடங்கும் அந்த பாடலை கவிஞர் கபிலன் அவர்கள் எழுதியுள்ளார்.

Mani

Recent Posts

பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…

2 years ago

எனது கேப்டன்சி குறித்து முடிவெடுக்க வேண்டியது பிசிபி தான் – பாபர் ஆசாம் பேச்சு

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…

2 years ago

மேற்குவங்க ரயில் விபத்து – நிவாரணத்தொகை எவ்வளவு? – ரயில்வே துறை அறிவிப்பு

டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…

2 years ago

ட்ரெண்ட்டின் கடைசி டி20 உ.கோ – நியூசிலாந்து அணி வெற்றி பெறுமா?

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…

2 years ago

நாயகி வாய்ப்புக்காக காத்திருக்கும் 96 பட குழந்தை நட்சத்திரம், போட்டோஷூட் பார்த்து வாயை பிளக்கும் ரசிகர்கள்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…

4 years ago

இளம் நடிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய பிரபல நடிகர்- ஒரு பார்வை

தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…

4 years ago