செய்தி வாசிப்பாளர் பணிமலரை தொலைக்காட்சியில் பார்த்ததை விட, சமூக வலைத்தளங்களின் பார்ப்பதே அதிகம். அந்த அளவிற்கு அவர் வெளியிடும் வீடியோக்கள் சில நேரங்களில் வைரல் ஆவது உண்டு. அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தன்னிடர் தவறாக அணுகிய ஒரு ஆணை தோலுரித்து உள்ளார். கடை திறப்பிற்க்காக அழைத்து வேறு சில விடயங்களுக்கு அட்ஜஸ்ட் செய்வதற்கு பணத்தை அள்ளித்தருவதாக அந்த நம்பர் வாட்ஸாப்பில் கூறிய தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

பனிமலர், ஆரம்ப காலத்தில் புதிய தலைமுறை, சன் தொலைக்காட்சி போன்றவற்றில் பனி செய்துகொண்டிருந்தார். தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக உள்ளார். இவர் பனிமலர் வேர்ல்ட் என்னும் யுடீயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதே போல முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் தன்னுடைய கருத்துக்களை வீடியோ மூலம் வெளியிட்டு வருகிறார்.
அப்படி சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், இணையதளத்தில் இயங்கும் பெண்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் ஏராளமான பிரச்சனைகள் குறித்து பல தகவல்களை பகிர்ந்தார். அதில் ஒன்றாக தனக்கு வாட்சாப் மூலம் வந்த ஒரு தொல்லை குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது, யாரென்று தெரியாத ஒரு நபர், கடை திறப்பிற்க்காக தன்னை வாட்ஸாப்பில் அணுகி, கடை திறப்பதற்கு ஒரு லட்சம் தருவதாகவும் அதன் பிறகு தன்னோடு ஒரு இரவு தங்கினால் எவ்வளவு வேண்டுமானாலும் தருவதாகவும் கூறியுள்ளார். இதனால் கடுப்பான பனிமலர், அந்த நபரின் செல் போன் விவரங்களோடு அந்த நபரின் சாட்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது மட்டும் அல்லாமல், தனக்கு தெரிந்த பெண்ணிடம் பனிமலர் பேசுகையில் அந்த பெண் திடுக்கிடும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதாவது அந்த பெண் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு லைவ் வீடியோ வெளியிட்டதாகவும். அந்த லைவ் வீடியோ முடிந்தபிறகு அவருக்கு ஒரு வீடியோ கால் வந்ததாகவும், அதில் ஒரு ஆண் ஆடை இல்லமால் நின்றதாகவும் பனிமலரிடம் அவர் கூறியுள்ளார்.

இது போன்ற செயல்களில் அதிகம் இந்தி காரர்கள் தான் ஈடுபடுவதாகவும், ஆண்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடும் முன்பு, தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கும் இது போன்ற தொந்தரவுகள் இருந்தால் என்னவாகும் என்று யோசிக்க வேண்டும் என்றும் பனிமலர் கூறியுள்ளார். அதே சமயம் தனது உள்ளிட்ட தெரிகிறது என்று லைவில் ஒருவர் கூற. ஆமாம் என் உள்ளாடை தெரிகிறது அதற்கு என்ன என்று கூறி வெளுத்திவிட்டார் பனிமலர்.