ஒரு காலகட்டத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமே மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டது. மற்ற தொலைக்காட்சிகள் எதிலும் பெரிதாக சீரியல்கள் ஒளிபரப்பானது கிடையாது. விஜய் தலைக்காட்சியை பொறுத்தவரை ஆரம்பத்தில் ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமே பெரிதாக கவனம் செலுத்தப்பட்டது.

விஜய் தொலைக்காட்சியில் மாலை நேரத்தில் தொடர்ச்சியாக சீரியல் ஒளிபரப்பப்படும் என்ற அறிவிப்பு வெளியானதும், பலர் அதற்க்கு, இது சரிவராது, நீங்களும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். ஆனால் இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
தற்போது, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கிய லட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்கள் ரசிகர்களின் மத்தியில் அதிகப்படியான வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் TRP ரேட்டிங்கிலும் இந்த சீரியல்கள் நல்ல ஒரு நிலையில் தான் உள்ளது. கடந்த வரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் எந்த சீரியலிற்கு அதிக பார்வையாளர்கள் இருந்துள்ளனர் என்ற விவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் அதிகப்படியான பார்வையாளர்களை கடந்த வாரம் பெற்றுள்ள சீரியல் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் முழுவதும் லட்சுமி அம்மாள் இறந்திருப்பது போன்ற காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வந்தது. அதோடு கண்ணனின் நிலைவேறு பரபரப்பாக இருந்தது.
கண்ணன் வருவாரா மாட்டாரா போன்ற எதிர்பார்ப்பு கடந்த வாரம் முழுவதும் நீடித்தது. அதன் காரணமாக சீரியல் முன்னிலையை தொட்டுள்ளது. லட்சுமி அம்மாளின் கதாபாத்திரம் சீரியலில் முடிவுற்றாலும் அவர் போகும்போது கூட சீரியலுக்கு நல்லது தான் செய்துள்ளார் என்று ரசிகர்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.