பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் புது அவதாரத்தை பார்த்துவிட்டு அவருடைய சொந்த தங்கை என்ன கூறியுள்ளார் தெரியுமா?

pandiyan stores kannan

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது மிகவும் விருவிருப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அடுத்தடுத்து என்ன நிகழப்போகிதோ என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் கதையின் போக்கு அமைந்துவருகிறது. லட்சுமி அம்மாளின் இறப்பிற்கு பிறகு கண்ணனின் போக்கும் எப்படி இருக்கப்போகிறது, அண்ணன் தம்பிகள் ஒன்றாக இருப்பார்களா இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

pandiyan stores

லட்சுமி அம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே அவரை பார்க்க கண்ணன் நடையாய் நடந்தும் மூர்த்தி அவரை அனுமதிக்கவில்லை. ஆகையால் அப்போதே கண்ணன் மன வருத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் கண்ணன் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட, அப்போது லட்சுமி அம்மாள் இறந்துவிடுகிறார். செல் போனை கடையில் விட்டு சென்றதால் கண்ணனை தொடர்புகொள்ளமுடியாது ஒரு சூழல் உருவாகிறது.

வேறு வழி இல்லாமல் கண்ணன் வருவதற்கு முன்பே லட்சுமி அம்மாள் அடக்கம் செய்யப்படுகிறார். இந்த நிலையில் கண்ணன் தன் அண்ணனிடம் சென்று, ஏன் நான் வரும் வரையில் காத்திருக்கவில்லை என்று கூச்சலிடுகிறார். இதனால் கடுப்பான தனம் கண்ணனிடம், அனைத்திற்கும் நீ தான் காரணம். நீ ஒழுங்காக இருந்திருந்தால் அத்தைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று கூறுகிறார்.

இந்த நிலையில், அடுத்த நாள் சில சடங்குகளுக்காக அண்ணன் தம்பிகள் மூவரும் லட்சுமி அம்மாள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு செல்கையில், அங்கு யாரும் எதிர்பாரா வண்ணன், கண்ணன் மொட்டை அடித்துக்கொண்டு சடங்குகளை செய்துகொண்டிருக்கிறார்.

pandiyan stores kannan

இப்படி கண்ணன் மொட்டையோடு நடித்திருக்கும் புகைப்படம் ஒன்றை அவரது தங்கை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, “உன்னுடைய நடிப்பு திறமைக்கு எனது பாராட்டுக்கள் அண்ணா, உன்னுடைய குரல், அர்ப்பணிப்பு எல்லாம் வியக்கவைக்கிறது. உன்னுடைய தங்கையாய் இருப்பதற்கு நான் பெருமைகொள்கிறேன். இதை எல்லாம் பார்ப்பதற்கு எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் தற்போது எவ்வளவு சந்தோசமாக உள்ளேன் என்பதை கூற வார்த்தைகள் இல்லை.” இவராக அவரது தங்கை பதிவிட்டுள்ளார்.

Leave a Comment