Homeடிவிபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இறக்கும் காட்சியில் நடித்த பிறகு லட்சுமி அம்மாள் என்ன செய்தார் தெரியுமா?...

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இறக்கும் காட்சியில் நடித்த பிறகு லட்சுமி அம்மாள் என்ன செய்தார் தெரியுமா? வெளியான போட்டோ இதோ.

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் லட்சுமி அம்மாள் என்ற கதாபாத்திரத்தை தற்போது இயக்குனர் முடிவுக்கு கொண்டுவந்து விட்டார். 4 பிள்ளைகளுக்கு தாயான அந்த கதாபாத்திரம் வீட்டின் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக இருந்தது.

pandiyan stores

நான்காவது பிள்ளையான கண்ணன், வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொண்ட பிறகு, லட்சுமி அம்மாளின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அவர் இறந்துவிட்டது போன்ற காட்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதே சமயம் கண்ணன் ஊரில் இல்லாததால், அவர் வந்த பிறகு அடக்கம் செய்யலாம் என்று அண்ணன்கள் யோசிக்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ, விரைவாக அடக்கம் செய்யலாம் என்று கூறுகின்றனர். இந்த நிலையில் கண்ணன் வந்து தன் அன்னையின் முகத்தை இறுதியாக காண்பாரா மாட்டாரா என்ற பரபரப்பில் சீரியல் சென்றுகொண்டிருக்கிறது.

இந்த நிலையில், லட்சுமி அம்மாள் கதாபாத்திரத்தில் நடித்தவர், தான் இறப்பது போல நடித்து முடித்த பிறகு அந்த சீரியலில் இயக்குனரோடு சேர்ந்து நின்று மகிச்சியாக சிரித்துக்கொண்டு இருப்பது போல ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது.

pandiyan stores

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள், லட்சுமி அம்மாள் இப்போது போல எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கட்டும். ஆனாலும் அவரை நிச்சியம் சீரியலில் நாங்கள் மிஸ் பண்ணுவோம் என்று கூறிவருகின்றனர்.

சற்று முன்