Homeடிவிபாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் நிஜமான அம்மாவை பார்த்துள்ளீர்களா? இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் நிஜமான அம்மாவை பார்த்துள்ளீர்களா? இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்.

விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. விஜய்தொலைக்காட்சியை பொறுத்த வரை கடந்த வாரம் அதிக பார்வையாளர்களை கொண்ட தொடர் இதுவாகவே இருந்துள்ளது. அண்ணன் தம்பி சென்டிமென்டை மையமாக கொண்டு எடுக்கப்படும் இந்த சீரியலில் கடைசி தம்பியாக நடிக்கிறார் கண்ணன்.

Pandian stores kannan
Pandian stores kannan

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனின் நிஜப்பெயர் சரவண விக்ரம். சீரியலில் இவர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டதால் இவரும் இவருடைய மனைவியும் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். இதனால் இவர் மனமுடைந்து போகிறார். சமீபத்தில் கூட ஐஸ்வர்யா கதா பாத்திரம் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த கதாபாத்திரத்தில் தற்போது சாய் காயத்ரி நடித்து வருகிறார்.

கடந்த வாரம் முழுக்க பாண்டியன் ஸ்டோரில் லட்சுமி அம்மாள் இறந்த காட்சி ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில் கண்ணன் மற்றும் லட்சுமி அம்மாளை கொண்டு பல யுடியுப் சேனல்கள் நேர்காணலை நடத்தினர். அதற்க்கு கண்ணன் இறுதியாக தன் தாயை சந்தித்துவிட்டார் போன்ற தலைப்பையும் அதற்க்கு வைத்தனர்.

இப்படி சீரியலில் தன் தாய்க்காக உருகி உருகி ஏங்கும் கண்ணனின் உண்மையான தாய் யார், அவர் கொடுத்துவைத்தவர் என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்ட நிலையில், கண்ணன் தற்போது தன் தாயோடு இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் கண்ணன் மொட்டையோடு உள்ளார்.

Pandian stores kannan
Pandian stores kannan

சீரியலில் லட்சுமி அம்மாள் இறப்பிற்காக மொட்டை அடித்த கண்ணன், அதே மொட்டையோடு தன் நிஜமான தாயோடு சேர்த்து வெளியிட்டுள்ள புகைப்படம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேலையில் கண்ணன் தன் நடிப்பின் மீது கொண்ட காதலால் தன்னுடைய கெட்டப்பையே மாற்றி மொட்டை அடித்துக்கொண்டதை பாராட்டி அவரின் தங்கை சமீபத்தில் ஒரு பதிவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிட தக்கது.

சற்று முன்