சினிமாவில் சிம்பு அனுபவிக்காத பிரச்சினைகளே இல்லை. சிம்பு-நயன்தாரா காதலிக்கும்போது இவர்களை ஒரு முன்மாதிரி ஜோடி என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் அவர்களுடைய அந்தரங்க புகைப்படங்கள் வெளியான சில நாட்களிலேயே இந்த ஜோடி பிரிந்தனர். அதன்பின்னர் இருவருமே அவரவர் வழியில் பயணிக்கத் தொடங்கினர். பின்னர் நயன்தாராவுக்கு பிரபுதேவாவுடன் காதல் ஏற்பட்டு பின்னர் அதுவும் பாதியிலேயே முறிந்து போனது.

பின்னர் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பதற்கு மிகக் கடுமையாக நயன்தாரா உழைத்தார். இப்பொழுது கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராய் ஜொலிக்கிறார். ஹீரோயின்க்கு முக்கியத்துவம் இருக்கிற தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும், நாயகிக்கான கதையை உருவாக்கிக் கொண்டு, நயன்தாராவின் கண்ணசைவிற்கு காத்திருக்கிறார்கள். தற்பொழுது விக்னேஷ்சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக சமீபத்தில் நயன்தாரா தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. தான் கலந்துகொண்ட ரியாலிட்டி ஷோவில் அதை உறுதிப்படுத்தினார் நயன்தாரா.
இப்படி இருக்கும்போது, சிம்புவின் மனசுல இன்னமும் நயன்தாராதான் இருக்கிறாங்க அப்படின்னு அவரைச் சுற்றி இருக்கக்கூடிய நண்பர்களே சொல்றாங்களாம். நயன்தாராவை அவர் இன்னும் மறக்கலன்னு சொல்றதுக்கு காரணம் என்னவெனில் அவர் தொடர்ந்து ஃபாலோ பண்ண கூடிய ஒரு விஷயம் தான்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு தற்பொழுது மாநாடு என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்தப் படத்திற்கான அறிவிப்பை 11.25 மணி அளவில் வெளியிடுவதாக சிம்பு அறிவித்திருந்தார்.

இந்த எண்களைக் கூட்டினால் 9 என்ற அவருடைய அதிர்ஷ்ட எண் வருமாம். நயன்தாராவை மனதில் வைத்துக்கொண்டே அவர் இப்படி நடந்து கொள்கிறார் என அவருடைய நெருங்கிய வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. தான் செய்யக் கூடிய காரியங்களில் இதேபோல நயன்தாராவை மையப்படுத்த கூடிய சில விஷயங்களை சிம்பு செய்வதாக அவர்களுடைய நண்பர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதற்கு சிம்பு மறுப்பு தெரிவிப்பதாக கூட இல்லையாம். பழைய காதலை மனதில் வைத்துக் கொண்டே இப்படி செய்கிறார் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள். எது எப்படியோ விக்னேஷ் சிவனுக்கு பிரச்சினை வராமல் இருந்தால் சரி.