Homeபொழுதுபோக்குதளபதி விஜய்யின் தந்தை ஜாதி சான்றிதழ் குறித்து பேசியதை அடுத்து, நயன்தாரா உள்ளிட்டோரை மேடையிலேயே விமர்சித்த...

தளபதி விஜய்யின் தந்தை ஜாதி சான்றிதழ் குறித்து பேசியதை அடுத்து, நயன்தாரா உள்ளிட்டோரை மேடையிலேயே விமர்சித்த புதுமுக நடிகர்.

டூரிங் டாக்கீஸ், சாகசம் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர்தான் நடிகர் அபி சரவணன் என்கின்ற விஜய் விஷால். இவர் தற்போது சாயம் படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் மேடையில் நடிகைகள் குறித்து பேசியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

sayam

அந்தோணிசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் விஷால் சியான் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகர்கள் இளவரசு, பொன்வண்ணன் நடிகை சீதா உட்பட பலர் இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது . இதில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சியும் கலந்துகொண்டார்.

படிக்கும் மாணவர்களின் மேல் சாதிச்சாயம் பூசப்படுவது குறித்து இந்த படத்தின் கதை அமைந்திருப்பதாக இப்படத்தின் இயக்குனர் தெரிவித்தார். நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சியும் விஜயின் சாதி சான்றிதழ் குறித்து சில கருத்துக்களை முன்வைத்தார். பிறகு பேசிய நடிகர் விஜய் விஷால், நடிகைகள் விழாமேடைகளில் கால் மேல் கால் போட்டு அமர்வது குறித்து காரசாரமாக பேசினார். நயன்தாராவாகவே இருந்தாலும் அப்படி செய்யாதீர்கள். சினிமாவில் சாதித்த பலர் மேடையில் அமர்ந்திருக்கும் பொழுது அப்படி செய்வது சரியான செயல் அல்ல என சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு அது மரியாதையாய் இருக்காது, ஒருவேளை நீங்க அணியும் உடை அதற்கு ஏற்றபடி இல்லையெனில் விழாவிற்கு வரும்பொழுது வேறு உடை அணியுங்கள் என்று கூறினார்.

vijay vishal

அப்பொழுது அந்த படத்தின் கதாநாயகி கால் மேல் கால் போட்டிருந்ததை தவிர்த்து நேராக அமர்ந்தார். இதை அங்கிருந்த பலரும் கவனித்துள்ளனர். இப்படி ஒரு ஹீரோ பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை இந்த படத்தில் நடிக்கும் பொழுது இருவருக்குமிடையில் ஏதேனும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்குமோ என பலர் கிசுகிசுத்துக் கொண்டனர்.

ஹீரோயின்கள் பொதுவிழாக்களுக்கு வரும் பொழுது கால் மேல் கால் போட்டு அமர்வது சில்க் சுமிதா காலத்திலிருந்தே தொடரும் ஒன்று. அவர்கள் அணிந்து வரும் உடையும் அதற்கு காரணமாக அமையும். நடிகைகள் இப்படித்தான் உடையணிந்து வரவேண்டும் என சிலர் கட்டளைகள் வேறு இடுகின்றனராம் என சிலர் கிசுகிசுக்கவும் துவங்கினர்.

சற்று முன்