Homeடிவிமௌன ராகம் சீரியலில் நடிக்கும் பெண்ணிற்கு இவளவு வயசு தான் ஆகுதா? அவரே சொன்ன சுவாரஸ்ய...

மௌன ராகம் சீரியலில் நடிக்கும் பெண்ணிற்கு இவளவு வயசு தான் ஆகுதா? அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் சீரியல் மௌன ராகம். இந்த சீரியலின் முதல் பாகம் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது. இந்த சீரியல் ஹீரோவான கார்த்திக்கிற்கு இரண்டு மனைவிகள். அதில் முதல் மனைவியில் பெண்ணாக நடிக்கிறார் ரவீனா தகா.

Raveena Daha

இவர் முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் 2009 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தங்கம் சீரியலில் நடித்திருந்தார். அப்போது அவருக்கு கிட்டத்தட்ட 5 வயது தான். அதன் பிறகு அவர் பல சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார்.

Raveena Daha

ராட்சசன் படத்தில் இவரை நாம் பள்ளி மாணவியாக பார்த்திருப்போம். படத்தில் மட்டும் அல்ல தற்போது வரை இவர் நிஜத்திலும் பள்ளி மாணவி தான். இவர் தற்போது 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு தற்போது வயது 17. பபொதுவாக பெண்கள் தங்கள் வயதை கூறமாட்டார்கள் அனால் இவர் தன் வயது இது தான் என்று சமீபத்தில் ஒரு youtube சானலிற்க்கு கொடுத்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

Raveena Daha

ராட்சசன் படத்திற்கு முன்பாக இவர், கத சொல்ல போறோம், ஜில்லா போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தது குறிப்பிட தக்கது. ஆனால் ராட்சசன் படமே இவருக்கு ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது.

இவர் ஒரு சிறந்த பாரத நாட்டிய டான்சர் என்பதும் குறிப்பிட தக்கது. ஜீ தமிழ் தொலைகாட்டிச்சியில் ஒளிபரப்பான ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Raveena Daha

மௌன ராகம் சீரியலில் இவர் அமைதியான ஒரு பெண்ணாக நடித்திருப்பார். இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் அந்த சீரியலில் இவர் ஒரு லீட் ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்