லட்சுமி அம்மாள் இந்த பிரபல நடிகரின் அம்மாவா? அவரை பழிவாங்க தான் இவர் சீரியலில் இருந்து நீக்கப்பட்டாரா?

Sheela Pandiyan stores

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர், அடுத்தடுத்து பல்வேறு திருப்பு முனைகளோடு சென்றுகொண்டு இருக்கிறது. இந்த தொடரில் சமீபத்தில் நடந்த இரண்டு விடயங்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அதில் ஒன்று ஐஸ்வர்யா கதாபாத்திரம் மாற்றப்பட்டது மற்றொன்று லட்சுமி அம்மாள் இறந்தது போல காட்டப்பட்டது.

Sheela Pandiyan stores

4 பிள்ளைகளுக்கு அம்மாவாக பாண்டியன் ஸ்டோர்சில் நடித்த லட்சுமி அம்மாவின் உண்மையான பெயர் ஷீலா. கடந்த வாரம் முழுக்க இவர் இறந்திருப்பது போன்ற காட்சிகள் தான் ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தன. குடும்பத்தின் இளைய மகனான கண்ணன் காதல் திருமணம் செய்துகொண்டதால், அவர் வீட்டை விட்டு தொரத்தப்பட்ட நிலையில், அவரின் பிரிவை தாங்க முடியாமல் தான் லட்சுமி அம்மாள் இறந்தது போன்று கதை கொண்டு செல்லப் பட்டது.

இதில் லட்சுமி அம்மாள் என்று அழைக்கப்படும் நடிகை ஷீலா உண்மையில் நடிகர் விக்ராந்தின் அம்மா என்பது குறிப்பிட தக்கது. நடிகர் விக்ராந்திடம் விஜய் டீவி சார்பாக பிக் போஸில் கலந்துகொள்வதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விக்ராந்த், ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். தங்கள் சேனலிற்க்கு போட்டி சேனலான ஜீ தமிழிற்கு விக்ராந்த் சென்றதால் கடுப்பான விஜய் தொலைக்காட்சி, லட்சுமி அம்மாவை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

Vikrantha survaiver

ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்த மாதிரியான செயல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையின் போக்கை மாற்றி சீரியலையே வேறு திசைக்கு திருப்பிவிடும் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால் விஜய் தொலைக்காட்சியை பொறுத்தவரை கதைபடி தான் அந்த சீரியல் சென்றுகொண்டு இருப்பதாகவும். லட்சுமி அம்மாள் இறப்பது கதைப்படி தான் நடந்தது என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment