விஜய் தொலைக்காட்சியில் வருடா வருடம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்குபெற்ற கவின் லாஸ்லியா ஜோடி அந்த சீசனில் காதல் ஜோடியாக வலம் வந்தார்கள். இந்த ஜோடிக்கு கவின் மற்றும் லாஸ் ரசிகர்கள் கவிலியா என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே லாஸ்லியாவின் தந்தையார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த போது லாஸ்யாவை அவர் கடுமையாக கண்டித்தார். இதற்காகத் தான் உன்னை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பினேனா என்பதுபோல் திட்டினார். இதனால் மனமுடைந்து கதறி அழுத்த லாஸ்லியா அச்சமயம் கவினிடம் சில மணி நேரங்கள் சரியாக பேசாமல் கூட இருந்தார். பிறகு சாதாரணமாக பேசத் தொடங்கினார்.
எதுவாக இருந்தாலும் வெளியில் போய் பார்த்துக்கொள்ளலாம் இங்கு வேண்டாம் என்று கவின் அடிக்கடி பிக்பாஸ் வீட்டில் சொல்வதுண்டு. ஆகையால் இருவரும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த பிறகு நிச்சயம் தங்கள் காதலை தொடர்வார்கள் என்று ரசிகர்கள் சிலர் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் எதிர்பார்த்தது போல் நடக்கவில்லை. கவின் மற்றும் லாஸ்லியா ஜோடி ஒன்றாக இருப்பது போன்று எந்த ஒரு தகவலும் இல்லை. இருவரும் தங்கள் காதல் குறித்த கேள்விகளை தவிர்த்தே வந்தனர். இந்தநிலையில் ஒரு பேட்டியில் காதல் குறித்து லாஸ்லியாவிடம் கேட்டபோது, நான் மிகவும் நாணயமாக இருப்பேன். சில நேரங்களில் நான் எடுத்த முடிவுகள் தவறாய் போய் இருக்கலாம். அதற்காக யாரையும் நான் குறை கூற விருப்பவில்லை. காதலிக்க எல்லாம் இப்போது எனக்கு நேரம் கிடையாது. எனக்கு அதை விட பெரிய பொறுப்பு இருக்கிறது. என் குடும்பத்தை நான் தான் பார்த்துக்கொள்ளவேண்டும். என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் கவின் மற்றும் லாஸ்லியா ஜோடி நிச்சயமாக தற்சமயம் காதல் ஜோடியாக இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வந்த பிறகு லாஸ்லியா படங்களில் பிஸியாகி விட்டார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடிக்கும் பிரண்ட்ஸ் படத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் பிக் பாஸில் கலந்துகொண்ட தர்ஷனோடு இனைந்து கூகுள் குட்டப்பா என்ற படத்திலும் நடித்துளளார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் யூடியூபில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.