பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இன்று ஒரு முன்னணி இயக்குனராக இருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். ஆரம்பத்தில் சாப்ட்வேர் என்ஞ்சினியராக பணியாற்றிய இவர், திரைப்படத்தின் மீது கொண்ட காதலால் குறும்படங்களை இயக்க துவங்கினார். பிறகு அதில் இருந்து திரைப்படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

இவர் இயக்கத்தில் வெளிவதன், ஜிகிர்தண்டா உள்ளிட்ட சில படங்கள் வெற்றிப்படங்களாக இருந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இவர் இயக்கிய பேட்டை படம், வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதோடு அதற்கு முன்னப்பு ரஜினி நடிப்பில் வந்த காலா படம் சரியாக போகாத நிலையில், தீவிர ரஜினி ரசிகரான இவர் இயக்கிய பேட்ட படம், அக்மார்க் ரஜினி படமாக இருந்தது குறிப்பிட தக்கது.
சமீபத்தில் இவர் இயக்கி வெளிவந்த ஜகமே தந்திரம் படம் OTT யில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. அந்த படத்தில் இலங்கை பிரச்சனை குறித்து அவர் தொட்டிருந்தாலும், ஆழமாக அதை கூறாமல் இருந்ததே அந்த படத்தின் கலவையான விமர்சனத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.
அதே போல சமீபத்தில் வெளியான நவராசாவில் ஒரு பகுதியை இவர் இயக்கி இருந்தார். அதிலும் இலங்கை பிரச்னையை தொட்டிருந்தார். அடுத்ததாக மகான் என்னும் படத்தை இவர் இயக்கிக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் தன் மனைவியோடு இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தில் கார்த்திக் சுப்புராஜ் ஜோடியொடு சேர்ந்து, இன்னும் 2 ஜோடிகள் உள்ளன. அதில் பாபி சிம்ஹா ஜோடியும் உள்ளனர். இந்த புகை படத்தை பார்த்த ரசிகர்கள் பலர், ஜோடிப்பொருத்தம் சூப்பர் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.