Homeமூவிகள்எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த விஷயங்களை எல்லாம் கவனித்தீர்களா? மனுஷன் வேற...

எஸ்.ஜே.சூர்யாவின் கடமையை செய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த விஷயங்களை எல்லாம் கவனித்தீர்களா? மனுஷன் வேற மாதிரி யோசிச்சி இருக்காருப்பா..

வாலி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா. அதற்கு முன்னர் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக அவர் பணிபுரிந்துள்ளார். வாலி திரைப்படம் நடிகர் அஜித்திற்காகவே எழுதப்பட்ட கதை என்று ஒருசமயம் அவர் கூறியுள்ளார். இரட்டை வேடத்தில் அஜீத் முதன்முறையாக நடித்திருந்த வாலி திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகியது.

SJ Surya

அதன் பின்னர் நடிகர் விஜய்யை வைத்து அவர் இயக்கிய குஷி திரைப்படமும் மெகா ஹிட் ஆகியது. பின்னர் நியூ திரைப்படத்திற்கான கதையை எழுதிவிட்டு பல ஹீரோக்களிடம் அந்தக் கதையை கூறியதாகவும், சில ஹீரோக்கள் அந்தக் கதையில் நடிப்பதற்கு தயங்கிய காரணத்தினால் தானே அந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஷயத்தையும் அவர் சில நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களில் அவர் பெரிய ஹீரோக்களின் படங்களில் வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் உதாரணமாக நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். தெலுங்கில் மகேஷ்பாபுவின் ஸ்பைடர் படத்தில் கூட  சைக்கோ வில்லனாக நடித்திருந்தார்.

SJ Surya

கடந்த வருடம் மான்ஸ்டர் என்ற படத்தில் நடிகை பிரியா பவானி சங்கரோடு நடித்திருந்தார். அந்தப் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.  தற்பொழுது அவர் நடிப்பில் கடமையை செய் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அவரது முகம் பாதி மற்றும் சிங்கத்தின் முகம் பாதி, இவரது ஒற்றைக்கண் மற்றும் சிங்கத்தின் ஒற்றைக்கண் தெரிவது போலவும் ஒரு கட்டிடத்தின் செங்கல் சுவர் தெரிவது போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SJ Surya Kadamaiyai Sei

இதனால் இப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லராக இருக்கக் கூடுமோ என்று பலர் யூகிக்கின்றனர். இந்தப் படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா உடன் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். நடிகை யாஷிகா ஆனந்த் சில மாதங்களுக்கு முன்னர் விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்று வருகிறார். அந்தக் காரணத்தினால் இந்த படம் தொடர்பான பிரமோஷன் விழாக்களில் பங்கேற்பது கேள்விக்குறியான ஒன்றாக மாறியிருக்கிறது. இந்தப்படத்தின் ஷூட்டிங் சமயத்தில் இயக்குனர் செல்வராகவன் எஸ் ஜே சூர்யா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்