திரைக்கதை ஆசிரியராக தமிழ் சினிமாவிற்குள் வந்த லிவிங்ஸ்டன், காலப்போக்கில் நடிகராகவும் மாறிவிட்டார். கடந்த 1988 ஆம் ஆண்டு கன்னிராசி என்னும் திரைப்படத்திற்கு இவர் திரைக்கதை ஆசிரியராக இருந்தார். அதன் பிறகு பல்வேறு படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராக பணியாற்றிய நிலையில், 1988 ஆம் ஆண்டு வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்னும் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

நகைச்சுவையில் இருந்து வில்லன், கதாநாயகன் இப்படி பல்வேறு பரிணாமங்களில் இவர் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்து உள்ளார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் மூத்தவரான ஜோவிதா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரமான பூவே உனக்காக என்னும் தொடரின் மூலம் மக்களுக்கு பரிச்சயமான.
ஆனால் ஏனோ சில காரணங்களுக்காக அவர் பாதியிலேயே அந்த தொடரில் இருந்து வெளியேறினார். இந்த நிலையில் மீண்டும் அவர் சன் தொலைக்காட்சியில் ஒரு புதிய சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கன்னட சீரியலான “கஸ்தூரி நிவாஸா” என்னும் தொடரின் ரீமேகாக இந்த தொடர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தொடரில் கார்த்திக் வாசு மற்றும் நடிகை அம்பிகாவும் நடிக்க உள்ளனர். இசையில் ஆர்வம் கொண்ட இவர், இசை மூலம் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தது குறிப்பிட தக்கது.

நடிகை ஊர்வசியின் ரசிகை இவர். அதே போல நடிகை ஊர்வசியும் நடிப்பு குறித்த பலவேறு விஷயங்களை இவருக்கு கற்றுக்கொடுத்ததாக கூறப்படுகிறது. இனி அடுத்தடுத்து இவரை சீரியலில் நாம் காணலாம் என்பதில் சந்தேகம் இல்லை.