விஜய் டீவியின் பிரபலங்களில் மிகவும் முக்கியமானவர் தொகுப்பாளர் மாகாபா ஆனந்த். ஆரம்ப காலகட்டத்தில் ஆர்ஜே வாக இருந்த இவர், தொலைக்காட்சிக்கு வந்து படிப்படியாக தனது வாழ்வின் அடுத்த நிலைக்கு சென்றுள்ளார். சிவகார்த்திகேயன் விஜய் டீவியை விட்டு சினிமா துறைக்கு சென்றபொழுது விஜய் டீவியில் சிவகாத்திகேயனின் இடத்தை நிரம்பியவர் மாகாபா ஆனந்த்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொடங்கி தற்போது பல்வேறு நிகழ்ச்சிகளை இவர் தொகுத்து வழங்கி வருகிறார். இவரின் காமெடி கலந்த ஆங்கரிங்காகவே பல பேர் இவரது நிகழ்ச்சிகளை பார்த்து இவருக்கு ரசிகராகவும் மாறி உள்ளனர். இவர் விஜய் டீவியில் மட்டும் அல்லாமல் தனக்கென ஒரு யூடுயூப் சேனலும் நடத்தி வருகிறார்.
தற்போது சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பாகவும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் இவர் தான் தொகுப்பாளராக உள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜாக் மற்றும் ரோஷினி ஜோடி தனது குடும்பத்தோடு இணைந்து மாகாபா ஆனந்த் குடும்பத்தோடு ஒரு புகைப்படம் எடுத்துள்ளனர்.

அவர்கள் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் மாகாபா ஆனந்த் மனைவி, மகன், மகள் என அனைவரும் உள்ளனர். ஆரம்பத்தில் ரோஷினி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பேகேற்று அருமையாக பாடி மக்கள் மனதை கவர்ந்தது குறிப்பிட தக்கது.
அதனை தொடர்ந்து தற்போது பல்வேறு பிரபலங்களுடன் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் தன் கணவரோடு சேர்ந்து அவர் கலக்கி வருகிறார். இவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் பேர் இவர்களை பாலோ செய்கின்றனர். சமீபத்தில் தான் ஐம்பதாயிரம் பாலோயர் என்ற எண்ணிக்கையை இவர்கள் தொட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.