ஏ ஜி எஸ் நிறுவனம், முடிசூடா மன்னனான தளபதி விஜய்யை வைத்து தயாரித்த படம்தான் பிகில். இந்த படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று திரைக்கு வந்து உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக், கதிர், இந்திரஜா ஆனந்தராஜ், ஜாக்கிசெரஃப் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் இத்திரைப்படத்தில் நடித்து இருந்தனர்.

இந்த படம் முழுக்க முழுக்க பெண்களின் கால்பந்தாட்ட விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. இதில் கால்பந்தாட்ட குழுவில் இருக்கும் பெண்களில் ஒருவராக ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா நடித்திருந்தார். இவர் தற்போது பிரபல தொலைக்காட்சி ஒன்றின் பிரம்மாண்ட ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளாக தற்போது மூன்று ஷோக்கள் தான் ஒளிபரப்பாகி வருகின்றன. அவை சன் டிவியின் மாஸ்டர் செஃப், ஜீ தமிழின் சர்வைவர், விஜய் டிவியின் பிக் பாஸ் 5. அதில் மாஸ்டர் செஃப் மற்றும் சர்வைவர் தற்பொழுது ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றன. வரும் வாரத்திலிருந்து பிக் பாஸ் 5 ஷோவும் தொடங்க இருக்கிறது. இதற்கான புரோமக்கலெல்லாம் தற்போது வெளியாகிக் கொண்டிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறு அண்மையில் ஜீ தொலைக்காட்சியில் மிகவும் பிரமாண்டமாக துவங்கப்பட்டது தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 16 பிரபலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை அர்ஜுன் அவர்கள் செய்து வருகின்றார். இந்தப் பதினாறு நபர்களையும் இரண்டு குழுக்களாகப் பிரித்து இரண்டு தீவுகளில் சர்வைவல் செய்யும்படி நிகழ்ச்சியை காண்பித்து வருகின்றனர். இடையிடையே பலவிதமான போட்டிகளையும் வைத்து ஷோவை மிகவும் சுவாரசியமாக கொண்டு செல்கின்றனர்.
இந்த சர்வைவல் ஷோவில் 16 நபர்களில் ஒருவராக ரோபோ சங்கரின் மகள் இந்திராஜாவும் கலந்து கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் சர்வைவர் ஷோவில் இதுவரை இரண்டு நபர்கள் எலிமினேஷன் என்ற பெயரில் வெளியே அனுப்பப்பட்டு இருக்கின்றனர். அதில் முதலாவதாக ஸ்ருஷ்டி அவர்கள் வெளியேற்றப்பட்டார். அதேபோல் இந்த வாரம் நடந்த எலிமினேஷனுக்கான போட்டியில் காயத்ரியை எதிர்த்து போட்டியிட்ட இந்திரஜா தோல்வி அடைந்ததால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் சர்வைவல் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் தான் எடுத்துக்கொண்ட போட்டோவையும் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பிறகு தான் எடுத்த போட்டோ வையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த அனைத்து ரசிகர்களும் அதிர்ந்து போயினர். ஏனெனில் இவரது நிறம் முதலில் இருந்ததைவிட மிகவும் கருத்து, நிறைய முடிகள் கொட்டி, உடல் முழுக்க நிறைய காயங்களுடன் காணப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் சர்வைவர் நிகழ்ச்சி நிச்சயமாக ஒரு கடினமான ஷோவாகத்தான் இருக்கும் என்றும், இந்தப் போட்டியில் யார் இறுதி வரை தாக்குப்பிடித்து இருக்கப் போகிறார்களோ என்றும் ஆர்வத்துடன் பேசி வருகிறார்கள்.