தமிழகத்தில் உள்ள டிக் டக் பிரபலங்களில் மிக முக்கியமானவர் ஜி.பி முத்து. இன்றைய சூழலில் இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை சமூக வளையதளங்களை பயன்படுத்தும் பலருக்கும் இவரது முகம் பரிட்சயம். வணக்கம் டிக் டாக் நண்பர்களே என்று தொடங்கி இவர் பேசும் அனைத்தையும் கேட்பதற்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

டிக் டாக் ஆப் முடக்கப்பட்ட பிறகு, டிக் டாக் பிரபலங்கள் பலரும் youtube மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடீயோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஜி.பி முத்து வெளியிடும் பார்சல் வீடியோ அனைத்தும் சமூக வளையதளங்களில் ட்ரெண்டிங் தான்.
யுடியூபிற்கு வந்த பிறகு ஜி.பி முத்துவின் வருமானம் உயர தொடங்கியது. அதனை தொடர்ந்து அவர் சில மாதங்களுக்கு முன்பு செகண்ட் ஹான்ட் கார் ஒன்றை வாங்கி அதன் வீடியோவை வெளியிட்டிருந்தார். இப்பொதுக்கு எங்க போவதாக இருந்தாலும் அந்த காரில் தான் அவர் செல்கிறார். கார் சர்வீஸ் விட்ட வீடியோ கூட வெளிவந்தது.

தற்போது அந்த காரை தொடர்ந்து, புதிய BMW கார் ஒன்றை ஜி.பி முத்து வாங்கப்போறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதற்க்கு காரணம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் தான். BMW கார் முன்பாக நின்ற வண்ணன், விரைவில் BMW என்று எழுதி ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதனால் விரைவில் நம்ப அண்ணாச்சி BMW வில் வளம் வருவார் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவை பொறுத்தவரையில் BMW கார் 38.85 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதில் G P முத்து வாங்கவிருக்கும் கார் எத்தனை லட்சம் வரும் என்பது தெரியவில்லை.

தற்போது பட வாய்ப்பும் அவருக்கு அதிகரித்து வருவதால் அவர் இதை விட பெரிய காரை வாங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கூறுகிறார்கள் நெட்டிசன்கள். சன்னிலியோன் தமிழில் நடிக்கும் படத்தில் ஜி.பி முத்துவும் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.