இயக்குனர் திருமுருகன் அவர்களின் இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் மெட்டி ஒலி. ஆண்டுகள் பல கடந்தும் இன்று வரை இந்தத் தொடரின் வெற்றி பேசப்பட்டு வருகிறது. அந்த அளவிற்கு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் இந்த தொடரின் ரசிகர்களாக இருந்தனர். மேலும் இந்த தொடரில் டெல்லி குமார், காவேரி, நீலிமா ராணி, ரேகா, போஸ் வெங்கட், திருமுருகன் மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்தத் தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் காயத்திரி அவர்கள்.

ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்று தந்தை இல்லாமல் அவர்களை நல்ல முறையில் வளர்த்து திருமணம் செய்து கொடுத்து, அதன்பின் அவர்கள் குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதைக்களம் தான் மெட்டி ஒலி. இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களுக்கு மேல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதியும் மிகுந்த பரபரப்புடன் தான் இருந்திருந்தது. இதனால் பட்டி தொட்டி எங்கும் மெட்டி ஒலி தொடரின் புகழ் பரவியிருந்தது.
இந்தத் தொடரில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இதில் நடித்த பலரும் சினிமாக்களில் புகழ் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். இந்த சீரியலை அவ்வளவு சீக்கிரம் எவராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு சுவாரசியமான கதைகளத்தோடு நகர்ந்துகொண்டிருந்தது. இதில் மிகவும் சுவாரசியமான கதாபாத்திரமான சரோ என்ற கேரக்டரில் தான் காயத்ரி அவர்கள் நடித்திருந்தார்கள்.
மேலும் சுரேஷ் மேனன் இயக்கிய பாசமலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் காயத்ரி அவர்கள். 1995 ஆம் ஆண்டு தல தளபதி ஆகிய முன்னணி ஹீரோக்கள் இருவரும் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் அஜித்துடன் ஜோடியாக நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இப்போது சன் டிவியில் மிகவும் சுவாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா சீரியலிலும் மருமகளுக்கு ஏற்ற மாமியாரின் கேரக்டரில் மிகவும் அற்புதமாக நடித்து வருகிறார் காயத்ரி.

தற்போது காயத்ரியின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. காயத்ரியுடன் இருக்கும் அவரது மகளை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட இவ்வளவு அழகாக ஹீரோயின் போன்று இருக்கும் இவர் காயத்ரியின் மகளா? என்று வாயை பிளந்து பார்த்து வருகின்றனர். பலரும் இவர் ஏதாவது திரைப்படத்தில் நடித்துள்ளாரா இவ்வளவு அழகாக இருக்கிறாரே என்று பலவிதமான கருத்துக்களை வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.