இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநர்களின் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் ராஜமொளலி. இவர் எடுத்தப் படங்களிலேயே ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது பிரபாஸ், அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘பாகுபலி’. இப்படத்தின் இரண்டு பாகங்களும் வசூலை வாரிகுவித்தது.
இந்திய சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் இருந்தாலும் ராஜமொளலி இயக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பும் எதிர்பார்ப்பும் இருக்கும். அந்த வகையில், தற்போது ராஜமொளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோரவை வத்து ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை இயக்கியுள்ளார்.
‘ஆர்ஆர்ஆர்’ படத்தில், பாலிவுட்ட பிரபலங்களான ஆலியா பட், தேவ்கன், ஷ்ரேயா உள்ளிட்டோர் நடித்துள்ளார். முன்னணி நட்சத்திர பட்டாளங்களுடன் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவிருந்தது. தற்போது கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பல மாநிலங்கள் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வெளியிடு தள்ளிப்போனது.
இந்நிலையில், ராஜமொளலி தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 2001ஆம் ஆண்டு ராஜமொளலி ராமா என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு கார்த்திகேயா என்னும் மகனும் மயூகா என்ற மகளும் உள்ளனர்.
ராஜமொளலி தனது மனைவி பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய குழந்தைகள் உள்ளனரா என ஆச்சரியத்துடன் தங்களது கருத்துகளை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கும் டிஜிட்டல் காலமாகி விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் நாம் கற்பனை செய்த பல விஷயங்கள்…
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள்…
டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 30க்கும் மேற்பட்டோர்…
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறிய நியூசிலாந்து…
கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் இயக்குநர் C பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும்…
தமிழ் சினிமா உலகில் கடந்த 1997ம் ஆண்டு வெளியான பாரதி கண்ணம்மா படத்தின் மூலமாக இயக்குநராக தமிழ் சினிமா உலகில்…